சர்ச் இடிந்த விழுந்த விபத்தில் இஸ்லாமியர்களின் பணி மகத்தானது

Posted by Haja Mohideen (Hajas) on 5/28/2015 3:22:30 AM

 

 சர்ச் இடிந்த விழுந்த விபத்தில் இஸ்லாமியர்களின் பணி மகத்தானது

 

இஸ்லாமியர்களின் சேவை மகத்தானது; மறக்கு முடியாதது
பொறியியல் மாணவர் வியப்பு
★★★★★★★★★★★★★★★★★★★★★

மேலப்பாளையம் அருகே சர்ச் இடிந்த விழுந்த விபத்தில் இஸ்லாமியர்களின் பணி மகத்தானது,பாராட்டுதலுக்குரியது என பொறியியல் மூன்றாம் ஆண்டு மாணவர் ரபி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் சர்ச் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது,நாங்கள் எல்லாம் என்னவென்று தெரியாமல் இருக்கையில்,அருகிலுள்ள மேலப்பாளையம் இஸ்லாமியர்கள் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதை கண்டு வியந்தேன்.

இந்த பணியில் முழுக்க முழுக்க போலீசாருடன் இஸ்லாமியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டது மகத்தானது என பாராட்டினார்.

 

https://www.facebook.com/groups/baithussalam/permalink/839424739459578/

https://www.facebook.com/permalink.php?story_fbid=315629518607408&id=100004810867233

 

நெல்லையில் சர்ச் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாப சாவு! 13 பேர் படுகாயம்

Posted by: Veera Kumar Updated: Thursday, May 28, 2015, 11:52 [IST] :

நெல்லை: பாளையங்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் தேவாலயத்தின் மேற்கூரை புதன்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்ததில், கட்டடத் தொழிலாளர்கள் 3பேர் இறந்தனர்; பலத்த காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டனர். நெல்லை, பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ளது சேவியர் காலனி. இங்குள்ள சி.எஸ்.ஐ. சர்ச் தெருவில் தூய பேதுரு ஆலயம் உள்ளது. இங்கு முதல் தளத்தில் 60 அடி உயரத்தில் மேற்கூரையை கோபுர வடிவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 60 அடி அகலம், 100 அடி நீளத்தில் கம்பிகள் கட்டப்பட்டு, புதன்கிழமை கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. சேவியர் காலனியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜோஸ் என்பவர் ஏற்பாட்டில் நடைபெறும் இப் பணியில் நாகர்கோவில், ஆலங்குளம், சுரண்டை பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

3 died as under-construction Church collapses in Nellai

3 died as under-construction Church collapses in Nellai

 

பணி முடிந்த நிலையில் இரவு 8 மணியளவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மேல்பகுதியிலும், கீழ்தளத்திலும் கான்கிரீட் தளத்துக்காக நிறுத்தப்பட்டுள்ள தூண்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சப்தத்துடன் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது. கான்கிரீட் தளத்தில் நின்றிருந்த தொழிலாளர்கள், உடனடியாக வெளியேற முயன்றனர். எனினும், அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

பாளையங்கோட்டை தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மின்சாரம் இல்லாததால் மீட்புப் பணி தாமதமானது. இதையடுத்து, ஜெனரேட்டர் மூலம் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கிய நாகர்கோவில் அருகே உள்ள ராஜாவூரைச் சேர்ந்த எடிசன் (36), ஜஸ்டின் (50), மற்றொரு ஜஸ்டின் (40) ஆகிய 3 பேர் இறந்தனர். பலத்த காயமடைந்த தொழிலாளர்கள் ஆலங்குளம் அருகே உடையாம்புளியைச் சேர்ந்த முருகன் (27), முத்துக்குமார் (22) உள்ளிட்ட 13 பேர் மீட்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் கருணாகரன் வந்து மீட்புப் பணியை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெறுவோரைப் பார்த்தார்.

இதுகுறித்து கோட்டாட்சியர் பெர்மி வித்யா கூறியதாவது: இந்த கட்டுமானம் சாதாரணக் கட்டடம் போன்றது அல்ல. சுமார் 60 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி. முறையான திட்டமிடாமல், தேவையான நிறுத்தம் கொடுக்காத நிலையில் அதிக எடையில் கான்கிரீட் தளம் அமைத்ததால் இடிந்து விழுந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/3-died-as-under-construction-church-collapses-nellai-227591.html

 






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..