Home >> News >> Detail
  Login | Signup  

"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்!"

Posted by Haja Mohideen (Hajas) on 8/21/2015 6:05:29 AM

 

"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்!"

நமது கலாச்சார மரபுகளைக் கட்டிக் காத்தக் "கோட்டை!"

ஏர்வாடி தெற்கு மெயின்ரோட்டில் அமைந்திருக்கும் பழமையும், புதுமையும் கலந்த லெப்பைவளவு பள்ளிவாசலின் புகைப்படங்கள் தான் இவை.

இதற்கு "முகாம் பள்ளிவாசல்" என்ற பெயரும் உண்டு.

சுமார் 400 வருடங்களுக்கு முன் வாஸ்கோடகாமா -வின் தலைமையில் இந்தியாவை அடிமைப்படுத்த வந்தனர் போர்த்துகீசியர்கள்.

நாடு பிடிக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடற் போர் புரிந்து, 
அவர்களுக்குச் சிம்மச் சொப்பனமாகத் திகழ்ந்து இறுதியில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர் கேரளாவைச் சார்ந்த "குஞ்சாலி மரைக்காயர்" எனும் வீரத் திருமகனார் ஆவார்.

குஞ்சாலி மரைக்காயரின் படையில் தளபதியாகவும், முக்கிய வீரராகவும் இருந்து வீரப் போர் புரிந்த காயல்பட்டிணம் சகத் மரைக்காயரின் மகன் வழிப் பேரரும்,
மாபெரும் இஸ்லாமிய அறிஞரும், அழைப்பாளருமான 
அஷ்-ஷைகு சலாஹுத்தீன் அப்பா அவர்கள் போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்டிருந்த நமது கலாச்சார மரபுகளை மறுகட்டமைப்புச் செய்யவும், இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளவும் ஏர்வாடிக்கு வருகை தந்து முகாமிட்டுத் தங்கியிருந்த இடம் இப்பள்ளிவாசல் தான்.
இதனாலேயே இதற்கு முகாம் பள்ளிவாசல் எனும் பெயரும் வந்தது.
இன்றும் இப்பெயர் புழக்கத்தில் உள்ளது.

கி.பி 1674 -ல் ஏர்வாடிக்கு வருகைத் தந்த இறைநேசரும், சீர்திருத்தச் செம்மலுமாகிய சலாஹுத்தீன் அப்பா அவர்களின் மண்ணறை இப்பள்ளிவாசலின் வளாகத்தில் தான் உள்ளது.
மிகப் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்றையும் இங்கே காண முடியும்.

இறைநேசர் சலாஹுத்தீன் அப்பா அவர்களின் வருகைக்கு சுமார் 570 ஆண்டுகளுக்கு முன்பே ஏர்வாடியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
லெட்சுமி நரசிங்க புரம் என்று அழைக்கப்பட்ட ஏர்வாடியில் முஸ்லிம்கள் முதன் முதலில் வாழ்ந்த பகுதி இன்று லெப்பைவளவு என்று அழைக்கப்படும் இப்பள்ளிவாசல் உள்ள பகுதியாகும்.
ஃபத்தாஹ் அப்பா (பத்தாஸப்பா) என்று அறியப்படும் ஓர் இறைநேசரின் மூலம் இஸ்லாம் ஏர்வாடியில் அறிமுகமானது. இவரது மண்ணரை லெப்பைவளவு பகுதியில் திருக்குறுங்குடி சாலையை ஒட்டிய இடத்தில் வலதுபுறம் உள்ளது.

இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழும் இப்பகுதியில், 
நல்ல சமூக நல்லிணக்கம் பேணப்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டியதாகும்.
மரணித்த தங்கள் முஸ்லிம் தோழர்களின் நல்லடக்கத்திற்காக இப்பள்ளிவாசலின் மையவாடிவரை வருகை தருவார்கள் அப்பகுதியின் இந்துக்கள்.

பொதுவாக ஏர்வாடியின் எல்லா பள்ளிவாசல்களிலும் நோன்பு காலத்தில் முஸ்லிம்களால் காய்ச்சி விநியோகிக்கப்படும் நோன்பு கஞ்சியை வாங்குவதற்காக வருகைதரும் இந்து நண்பர்களின் வருகை ஏர்வாடியின் மற்ற பள்ளிவாசல்களை விட இங்கேயே அதிகமாக இருக்கும்.
மரக்குடி, கம்மாளர் தெரு, பொத்தையடி, கோவில்வாசல், பெருந்தெரு போன்ற பகுதிகளைச் சார்ந்த பல இந்து நண்பர்கள் இங்கு வருகை தருவார்கள்.

வரலாற்றுச் சிறப்பும், நல்ல சமூக நல்லிணக்கப் பாரம்பரியமும் கொண்ட லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல் ஏர்வாடியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.

 • Ameer Buhary Buhary மாஷா அல்லாஹ் இந்த வரலாற்று குறிப்பு எந்த புத்தகத்திலிருந்து எடுத்தீர்கள் அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாரா? இவ்வளவு பழமை வாய்ந்த பள்ளிவாசல் முகாம் என்றால் உண்மையில் அது ஏர்வாடியிக்கு பெருமை சேர்பதாகும் மேலும் அந்த வரலாற்றை ஆதாரபூர்வமாக முழுமையாக பதிவிட்டால் அதனுடைய பழமையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
   
 • Mohammed Aadhil இந்த வரலாற்றின் ஆணிவேர் தான் ஏர்வாடி ஆவணப்படம் விரைவில் முழு ஆதாரத்துடன் வெளிவர இருக்கிறது
   
 • Nellai Eruvadi Sunnath Jamath மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய ஆராய்ச்சித் துறை ஆய்வாளர் 
  டாக்டர் அஜ்மல் கான் M.A.PhD அவர்கள் எழுதிய 
  தமிழகத்தில் முஸ்லிம்கள் 

  போர்ச்சுகீசியர்கள் வருகைக்கு முன்பும் பின்பும்.

  சென்னை புதுக் கல்லூரி அரபித்துறை விரிவுரையாளர் மற்றும் ஆய்வு நெறியாளர் 
  டாக்டர் கா.மு.அ.அஹ்மது ஜுபைர் அவர்கள் எழுதிய இமாம் சதக்கத்துல்லா அப்பா வரலாறு.

  எழுத்தாளர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள் எழுதிய இஸ்லாமிய கலைக்களஞ்சியம்.

  இப்படி பல நூல்களில் கிடைத்த வரலாற்றுக் குறிப்புகளின் ஒருங்கிணைப்பு.Other News
1. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
2. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
3. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
4. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
5. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
6. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
7. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
8. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
9. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
10. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
11. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
12. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
13. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
14. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
15. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
16. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
17. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
18. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
19. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
21. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
23. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
24. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
25. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
26. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
27. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
28. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
29. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
30. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..