Home >> News >> Detail
  Login | Signup  

இந்தியா எனும் கூட்டுக் குடும்பம்

Posted by Haja Mohideen (Hajas) on 10/18/2015 2:27:01 AM

 

 

தூது ஆன்லைனில் வெளியாகியுள்ள லெப்பைவளவுத் தெரு சகோதரர் தம்பி உதுமான் தவ்ஃபீக் (OK நகர்) அவர்களின் கட்டுரை.

மாஷாஅல்லாஹ்!
அருமையான கட்டுரை.
நாம் அனைவரும் தவறாமல் வாசிப்போம்.

தம்பி தவ்ஃபீகுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.
மென்மேலும் சிறந்து விளங்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
ஆமீன்!

*** கட்டுரை ***

""இந்தியா எனும் கூட்டுக் குடும்பம்""

– உதுமான் தவ்ஃபீக் -
S/o பீர் முகம்மது.

இந்தியா ஒட்டுமொத்த உலகிற்கும் திறமை வாய்ந்த பணியாளர்களையும் தொழில் முனைவர்களையும் அளிக்கும் வளமான நாடு. வேறு வார்த்தைகளில் வர்ணிக்க வேண்டும் என்றால் பல உள்வலத் திறமைகளையும் பல சமூகங்களையும் அடக்கிய ஒரு கூட்டுக் குடும்பம்.

ஒரு கூட்டுக் குடும்பம் சிறந்த வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கடமையான உழைப்பை உழைத்தே தீர வேண்டும்.

சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை யும் கண்ணியத்தையும் அளித்தல் வேண்டும்.

சிறந்த குடும்ப உறுப்பினரின் மீது பிற உறுப்பினர்கள் பொறாமை கொள்ளவோ அவரின் உரிமை மற்றும் உடமையை பறித்தல் கூடாது. இவ்வாறு செய்வதால் அந்த குடும்பத்தின் வளர்ச்சி சிறப்பாய் அமையும் .

இது போல் அமைந்தால் மட்டும் தான் இந்தியா எனும் கூட்டுக் குடும்பம் சிறந்த வளர்ச்சியை அடைய முடியும்.

ஆனால் நம் நாட்டிலோ நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மத துவேஷ கருத்துக்களை விதைக்கும் சங்க பரிவார இந்துவ வாதிகளால் நம் நாடு நூறு ஆண்டுகள் பின் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

உதாரணமாக உத்திர பிரதேச மாநில டாத்திரியில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக பொய் கூறி ஒரு முஸ்லிம் குடும்பத்தை தாக்கி அஹ்லாக் என்ற முதியவரை கொலை செய்தது பாஸிச கும்பல்.

அஹ்லாகின் மகன் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இது மட்டுமல்லாமல் 2006 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் தன் நிலத்தின் உரிமையை கேட்ட சுரோகா என்ற பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மர்ம உறுப்பு சிதைக்கப்பட்டு கொலை செய்ய பட்டனர் . மேலும் கூற வேண்டும் என்றால் இஷ்ரத் ஜஹான், சொராபுதீன் சேக் போன்ற பல அப்பாவி மக்களை பட்டியலிடலாம்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பாதிப்பை இன்னும் வரை உணர வில்லை என்பதே மேலும் வேதனை தருகிறது.

பொதுவாக சிறந்த எழுத்தாளர்கள் தங்களுக்கு கொடுங்கோள் ஆட்சியாளர்களால் வழங்கப்படும் சலுகைகளை மறுத்தாக வரலாற்றில் படித்திருக்கிறோம் . அதை அசோக் வாஜ்பாயின் செயலால் நாம் இன்று காண்கிறோம்.

உண்மையில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு இந்துக்கள் மீதோ இந்து மதத்தின் மீதோ பாசம் கிடையாது சேஷமுத்திரம் கலவரத்தின் போது கொழுத்தப்பட்ட தேர் யாருக்கு சொந்தமானது? அதில் இருந்ததும் இந்து தேய்வ சிலைகள் அல்லவா?! அவர்களுக்கு தேவை வர்ணாசிரம் மட்டுமே என்பது தான் உண்மை.

இன்று பசுவிற்கு கோசம் போடும் கூட்டம் டெல்லியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சப்ரடர்ஜுங் மருத்துவமனையின் தவறான பரிசோதனையால் உயிர் இழந்த சிறுவன் அமன் சர்மா என்ற மனித உயிருக்கு கோசம் போடதது ஏன்? அநீதி இழைத்து பா ஜ கா அரசு என்றதாலா…

இன்று “மத சக்கிப்பு தன்மை ” வேண்டும் என்று கூறும் ராஜ்நாத்சிங் மத துவேஷத்தை பேச்சில் பரப்பும் பா ஜ க MP களின் நாவை முதலில் கட்டுபடுத்தட்டும்

இந்திய கூட்டுக் குடும்பம் வளர்ச்சியடைய முதலில் தேவை “மத சக்கிப்பு தன்மை ” அல்ல மத வெறி பிடித்த RSS க்கு மனித தன்மை முதல் தேவை. அது கிடைக்கும் வரை அவர்கள் உடலால் மட்டும் தான் மனிதர்கள். மனிதனை மதம் என்ற கண் கொண்டு பாராமல். இறைவனின் படைப்பு என்றும் பல உறவுகள் என்றும் நாம் காணும் போது இந்திய கூட்டுக் குடும்பத்தில் வளர்ச்சி வானலாவ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://web.facebook.com/photo.php?fbid=1489946904667996&set=a.1396488287347192.1073741828.100009581022932&type=3

 






Other News
1. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
2. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
3. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
4. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
5. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
6. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
7. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
8. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
9. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
10. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
11. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
12. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
13. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
14. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
15. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
16. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
17. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
18. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
19. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
20. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
21. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed
22. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
23. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
24. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
25. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed
26. 22-12-2019 South Asian students join anti-CAA protests outside Indian mission in London - S Peer Mohamed
27. 22-12-2019 From NYU to University of London, Students Protest CAA in Freezing Cold - S Peer Mohamed
28. 22-12-2019 Indian Diaspora Stage Anti CAA-NRC Protest March In Germany (Video) - S Peer Mohamed
29. 22-12-2019 Indians in Finland raise slogans, read Preamble at anti-CAA protest in Helsinki - S Peer Mohamed
30. 22-12-2019 Best posters from CAA Protest - 2 - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..