ஷஹீத் காஜா முகைதீன் படுகொலை கைது! வலுக்கும் சந்தேகங்கள்!

Posted by S Peer Mohamed (peer) on 12/31/2015 1:26:24 AM

சரியான பாதையில் செல்கிறதா வழக்கு?

கைது செய்யப்பட்டுள்ள ஏழு காவி பயங்கரவாதிகளோடு மட்டும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவது அப்பட்டமான ஏமாற்று வேலையாகும்.

1) முத்துராமன் தாக்கப்பட்ட பின்னர் கைக்காட்டியில் இந்துத்துவவாதிகள் நடத்திய ஆர்பாட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான இந்துத்துவ அமைப்பின் தலைவர்கள் பழிக்குப் பழி வாங்குவது குறித்து பகிரங்கமாகப் பேசிச் சென்றனர்.
அவர்களில் ஒருவரைக் கூட இந்த வழக்கில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
மாநிலத் தலைமையின் பங்களிப்பின்றி இந்த கொலை நடக்க வாய்ப்பே இல்லை.

2) ஆட்டோவில் ஏறி சகோதரனை சதி செய்து அழைத்துச் சென்ற அந்த பெண் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
கொலையாளிகளை பிடித்த காவல் துறைக்கு அந்தப் பெண்ணை பிடிக்க முடியாதா?
அந்த பெண்ணை ஏன் கைது செய்யவில்லை?

3) ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பெரும் புள்ளி ஒருவரை காப்பாற்றும் விதமாகவே
முத்துராமன் கும்பலோடு மட்டும் குற்றவாளிகளை முடிவுக்கு கொண்டுவரப்படுகிறதா?

4) கைது செய்யப்பட்டவர்கள் அளித்துள்ள தகவல் என்ன?
கொலைக்கு அவர்கள் என்ன காரணத்தைக் கூறியுள்ளனர்?

5) காவல்துறையின் சில செயல்பாடுகள் குறித்த கேள்விகள்

இப்படி பல கேள்விகளும், சந்தேகங்களும் இந்த கைது மற்றும் வழக்கு விஷயத்தில் தீர்க்கப்படாமல் இருப்பதால் நம்முடைய போராட்டங்களின் வீரியத்தை நாம் குறைத்துவிடக்கூடாது.

எய்தவர்கள் காப்பாற்றப்பட்டு
அம்புகள் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது???

நம் சகோதரன் கொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
எந்த குற்றவாளியும் தப்பக்கூடாது.

ஏதோ சதி செய்கிறார்கள்.
நாம் ஏமாந்து விடக்கூடாது.

ஏழு காவித் தீவிரவாதிகளை கைது செய்ததது குறித்து நம் சகோதரர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தால்,
எங்கே காவல்துறைக்கு நன்றி தெரிவித்து வால்போஸ்டரே ஒட்டிவிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஏர்வாடி அனைத்து ஜமாத்தார்களே! இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் சகோதரர்களே!
காவல்துறையினரின் கனிவான பேச்சுக்களும்,
இனிப்பான வார்த்தைகளும் நம் சிந்தனையை மறைத்து மயக்கிவிட வேண்டாம்!

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்!
நம் சகோதரனின் இரத்ததிற்கு நீதி பெறுவோம்!

அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்!

Nellai Eruvadi Sunnath Jamath


 

ஒப்புதல் வாக்குமூலத்தில் கதிர்வேல்சாமி, மகேஷ் என்ற இருவரும் தாங்கள் தான் காஜாவை கொன்றோம் என்று கூறியுள்ளார்கள்

முத்துராமன் பிரச்சினையில் பழிவாங்க காஜாவை கொலை செய்ய மற்ற குற்றவாளிகளோடு திட்டம் தீட்டியதாகவும் ஏற்கெனவே ஒருமுறை முயன்று அதில் சூழல் சரியாக அமையாததால் காஜாவை கொல்ல முடியாமல் போனது என்றும் கூறியுள்ள இவர்கள்

சம்பவத்தன்று சவாரி சென்றுவிட்டு வந்த காஜாவை காந்திநகர் அருகில் வழிமறித்து மகேஷ் டிராக்டர் பழுதாகி நிற்பதாகவும் தன்னைக் கொண்டு டிராக்டர் நிற்கும் இடத்தில் விடச்சொல்லி அழைத்துச் சென்றதாகவும் அங்கே சென்றவுடன் மகேஷ் இறங்கியதும் அங்கே தயாராக நின்ற கதிர்வேல்சாமி பின்னால் நின்று காஜாவை அரிவாளால் வெட்டியதாகவும் அவரோடு மகேஷ்ம் இரும்பு ராடால் காஜாவை தாக்கி கொன்றதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெண்ணை காஜா ஏற்றிச் சென்ற மேட்டரே வரவில்லை.

சில சந்தேகங்கள்

முத்துராமன் வெட்டப்பட்ட வழக்கில் குற்றவாளி(?)களிடம் பக்கம் பக்கமாக பத்து பக்கத்துக்கு மேல் தெளிவான பிரிண்டில் ஒப்புதல் வாக்குமூலம் தயார் செய்த காவல்துறை காஜா வழக்கில் வெறும் ஒன்றரை பக்கத்துக்கு ஒப்புதல் வாக்குமூலம் ஏதோ பெயருக்கு வாங்கியுள்ளது.

அதுவும் சில இடங்களில் எழுத்தே விழவில்லை. பிரிண்டிங் லட்சணம் அவ்வளவு கேவலம். . தெளிவாக பிரிண்ட் போட முடியாதா இல்லை வேண்டுமென்றே வழக்கை கொலையாளிகளுக்கு சாதகமாக உருக்குலைக்கும் சூழ்ச்சியா ?

‪#‎நம்‬ ஊரின் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களுக்கு இச்செய்திகளை கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்

தெளிவான சீனியர் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அனைத்து விடயங்களையும் கேஸ் டிரைலுக்கு வருகிறபோது அவ்வழக்கறிஞர் வழக்காடி கேஸை நிலைநிறுத்தவேண்டும்.

(முழு திட்டமிடல், தான் தாக்கப்பட்டதற்கு பழி எடுக்க வேண்டும் என்பதெல்லாம் முத்துராமன் தான் இதில் முக்கியம் என்பதை அவர்கள் கொடுத்த வாக்குமூலத்திலே வந்துவிட்டது பத்திரிக்கை செய்தியாக)

அப்துல் காதிர் மன்பஈ 

Abdul Kader Manbayee

 


பெற்றோர்களின் வேதனை....



 










Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..