Home >> News >> Detail
  Login | Signup  

கோவை வன்முறை - அனைத்து கட்சியின் தலைவர்கள் சூளுரை

Posted by S Peer Mohamed (peer) on 9/25/2016 2:48:22 PM

வன்முறை வெறியாட்டத்தை கட்டுப்படுத்தாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்த்த சூழலில் மதவெறியர்களை புறக்கணித்து கோவை மக்கள் ஜனநாயகத்தை பாதுகாத்தார்கள், கோவையை பாதுகாக்க ஓரணியில் நிற்போம் என்று அனைத்து கட்சியின் தலைவர்கள் சூளுரையேற்றனர்.

இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சசிகுமார் என்பவர் வியாழனன்று அன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கோவையில் பல்வேறு இடங்களில் சங்பரிவார அமைப்புகள் வன்முறை கும்பல்கள் சசிக்குமார் கொலைக் பயன்படுத்தி மத அரசியலை வைத்து ஆதாயம் தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இதனால் அப்பாவி பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர் பதட்டமும், அச்சமும் உருவானது. இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் முயற்சியில் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து அமைதிக்குழுவை ஏற்படுத்த வேண்டும். கோவை நகரத்தின் அமைதிக்கு அனைத்து விதத்திலும் உங்களோடு நாங்கள் இருப்போம் என உறுதியளித்தனர். இதன் ஒருபகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அனைத்து கட்சியினர் மற்றும் முற்போக்கு அமைப்பினர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் ஒற்றுமை காத்திடுவோம் என்கிற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், சிபிஐ முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, மனோகரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மகேஷ்குமார், மயூரா ஜெயக்குமார், அனுஉலை எதிர்ப்பாளர் உதயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜோ.இலக்கியன், நிலாமணிமாறன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் வி.வாசன், தபெதிக கட்சியின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் தேமுதிகவினர், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏக்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை செயலாளர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் கட்சியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் வெண்மனி மற்றும் ஏராளமான அமைப்பின் தலைவர்கள், ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்ட உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பேசுகையில், சங்பரிவார அமைப்புகள் கோவையை குஜராத்தாக மாற்றுவோம் என்று முழக்கமிட்டு வெறியாட்டம் நடத்தினர். திட்டமிட்டு ஒருபிரிவினர் கடைகளை குறிவைத்து தாக்கியபோதும், தீக்கிரையாக்கப்பட்ட போதும் கோவை மக்கள் மதவெறி சக்திகளின் வெறுப்பேற்றும் நடவடிக்கைக்கு சிறிதும் இடமளிக்காமல் பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த இந்த மண்ணை ஒருபோதும் மதவெறியர்களின் பிடியில் சிக்க விடமாட்டோம் என்று ஜனநாயகத்தை காத்தார்கள். ஆனால் வழிநெடுக நடைபெற்ற இந்த வன்முறை சம்பவங்களை வேடிக்கை மட்டும் பார்த்தது காவல்துறை. தமிழகத்தில் நடைபெற்று வரும் கூலிப்படையினரின் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியாத காவல்துறை, சசிக்குமார் படுகொலைக்கு பின்பு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்பதை அறியாத உளவுப்பிரிவு காவல்துறை என அனைத்து தோல்வியடைந்துள்ள நிலையில் இதுகுறித்து இதுவரை தமிழகத்தின் அமைச்சர்கள் அறிக்கைகூட விடாதது கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வளவு பெரிய சம்பவம் நடைபெற்றும் மற்றொரு பிரிவினர் அமைதி காத்தது என்பது ஜனநாயகத்தின்பால் அவர்கள் நிற்கிறார்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளனர்.

இந்த சமயத்தில் அனைத்து கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து கோவையை காப்போம், மக்கள் ஒற்றுமையை காப்போம், மதநல்லிணக்கம் காப்போம், மதவெறி சக்திகளை தனிமைப்படுத்துவோம் என உரையாற்றினார்கள். முன்னதாக அனைத்து கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மதநல்லிணக்க உறுதிமொழியேற்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்ட உறுதிமொழியேற்பு நிகழ்வில் நூற்றுக்கானோர் பங்கேற்றனர்.






Other News
1. 02-03-2021 ஏர்வாடியின் இளம் ஹாஃபிளா (முழு குர்ஆன் மனனம்)- மாணவி ஸாதிகா - S Peer Mohamed
2. 02-03-2021 புதுச்சேரி - வில்லியனூரில் மினி மாரத்தான் - ஏர்வாடி மாணவர் முஹம்மது ஜஸூர் முதலிடம் - S Peer Mohamed
3. 25-02-2021 2 வது மாதமாக நோயாளிகளை நலம் விசாரித்தல் - S Peer Mohamed
4. 25-02-2021 #குஜராத்துக்குஒருநீதி #தமிழ்நாட்டிற்குஒருநீதியா...? - S Peer Mohamed
5. 25-02-2021 சப்-ஜூனியர் - தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக ஏர்வாடி விளையாட்டு வீரர் தேர்வு - S Peer Mohamed
6. 19-02-2021 கைப்பந்து வீரர்களுக்கான மாநில அளவிலான தேர்வில் ஏர்வாடி முஹம்மது அய்மன் தேர்வு - S Peer Mohamed
7. 15-02-2021 விவசாயிகள் போராட்டம் - உள்ளூர் ஹீரோக்களும் உலக அரசியலும் - S Peer Mohamed
8. 23-01-2021 ஏர்வாடி: LV Sports Club: 19ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி - S Peer Mohamed
9. 23-01-2021 Open Badminton Tournament in Eruvadi / 26-Jan - S Peer Mohamed
10. 13-01-2021 EMAN Free Dress Bank - Sharing is carring - S Peer Mohamed
11. 03-01-2021 ஏர்வை ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாவட்ட அளவில் மாபெரும் கிரிக்கெட் போட்டி 7-Jan - S Peer Mohamed
12. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகளுக்காக உணவு தயாரிக்கும் முஸ்லீம்கள் - S Peer Mohamed
13. 05-12-2020 Scenes from a farmers’ protest camp: It’s hard to see how the Modi government can shut this down - S Peer Mohamed
14. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் - கார்ட்டூன்கள் - S Peer Mohamed
15. 05-12-2020 பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு: விவசாயிகள் எதைப் பற்றி போராடுகிறார்கள்? - S Peer Mohamed
16. 05-12-2020 நமதூர் ஆசிரியர்கள் நமதூர் ஆசிரியர்கள் , திரு. அனந்த நாராயணன் , ஷரிபா மேடம் இரங்கல் செய்திகள் - S Peer Mohamed
17. 06-10-2020 India: paper-based coronavirus test could be a game changer - S Peer Mohamed
18. 02-10-2020 Justice in ruins: On Babri Masjid demolition case verdict - S Peer Mohamed
19. 27-09-2020 நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் வெடிகுண்டு வீசியும் கழுத்தறுத்தும் 2 பெண்கள் படுகொலை - S Peer Mohamed
20. 02-09-2020 மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா? - S Peer Mohamed
21. 02-09-2020 #திரு.#H.#வசந்தகுமார் அவர்களின் மரணம் #விதியா? #சதியா? - S Peer Mohamed
22. 02-09-2020 ஏர்வாடியில் நாடித் துடிப்பி பார்ப்பதற்கு - டாக்டர் ஜமீல் - S Peer Mohamed
23. 28-08-2020 Expats over age 60 with no degree have until year's end to leave Kuwait - S Peer Mohamed
24. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
25. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
26. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
27. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
28. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
29. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed
30. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..