அமீரக ஈமான் கிரிக்கெட் போட்டிகள் (EPL)

Posted by S Peer Mohamed (peer) on 1/4/2017 2:10:24 PM

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஏர்வாடி சகோதரர்கள் பங்கேற்ற EPL என்னும் ஈமான் கிரிக்கெட் போட்டிகள் 01/01/2017 அன்று இனிதே நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிகழ்ச்சி அல் நஹ்தாவில் ஜுலைஹா மருத்துவமனை அருகில் உள்ள விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. நான்கு அணிகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு விளையாடினர்.

முதல் ஆட்டத்தில் சகோதரர் நைனா தலைமையிலான Deira lions அணியும் சகோதரர் ஜெய்னுல் தலைமையிலான Sharjah sharks அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய Deira Lions அணி குறிப்பிட்ட 16 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 79 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சொஹைல் அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார். Sharjah Sharks அணியின் பந்து வீச்சாளர்கள் ஹாரித் மற்றும் ஜெய்னுல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பின்னர் வெற்றிக்கு தேவையான இலக்கினை நோக்கி ஆடிய Sharjah Sharks, ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றியை ஈட்டியது. 6 விக்கெட்களை இழந்து 81 ரன்களை அந்த அணி 15.1 ஓவர்களில் பெற்றது. அல்தாப் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற முதுகெலும்பாக இருந்தார். ரிஸ்வான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இரண்டாவது போட்டியில் சகோதரர் ஹஸன் தலைமையிலான Burdubai panthers அணியுடன் சகோதரர் ரியாஸ் தலைமையிலான Abudhabi wolves அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய Abudhabi wolves அணி குறிப்பிட்ட 16 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 96 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முஹைதீன் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். Burdubai panthers அணியின் பந்து வீச்சாளர் மீரான் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். பின்னர் வெற்றிக்கு தேவையான இலக்கினை நோக்கி ஆடிய Burdubai panthers , 8 விக்கெட்களை இழந்து 87 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பக்கர் சிறப்பாக ஆடி 20 ரன்கள் எடுத்தார்.Abudhabi wolves அணியின் சாஹிப் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இறுதிப்போட்டியில் Sharjah sharks அணியுடன் Abudhabi wolves அணி மோதியது. இந்தப் போட்டி Sharjah sharks அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் தடுப்பு காரணமாக ஒரு சார்பு போட்டியாக மாறியது. முதலில் விளையாடிய Abudhabi wolves அணி 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 44 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. இதில் ஏறத்தாழ பாதி ஓட்டங்களை ( 23 ) அந்த அணியின் ருமைஸ் மட்டும் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 3 வீரர்கள் ரன் அவுட் ஆக நெளஷாத் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை எடுத்தார்.

 

வெற்றிக்கு தேவையான 45 ஓட்டங்களை நிதானமாக விளையாடி 11 ஓவர்களில் பெற்று Sharjah sharks அணி சாம்பியன் பட்டத்தினை வென்றது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 21 ரன்களுடன் தத்தளித்த அணியினை கேப்டன் ஜெய்னுல் (15) மற்றும் அல்தாப் (16) ஆகியோர் ஆட்டமிழக்காமல் விளையாடி கரை சேர்த்தனர்.

இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அல்தாப் தொடர் நாயகன் விருதினை வென்றார். அபுதாபி அணிக்கான இரண்டாவது பரிசு கோப்பையினை ஈமான் செயலாளர் சகோதரர் இப்ராஹிம் வழங்கினார். முதல் பரிசுக்கான கோப்பையினை ஷார்ஜா அணிக்கு அந்தக் கோப்பையினை ஸ்பான்சர் செய்த சிட்டி கோல்ட் சார்பாக சகோதரர் ரபிக் வழங்கினார். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு, குளிர்பானம் மற்றும் டீ வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த மற்றும் ஆதரவு தந்த சகோதரர்கள் அனைவருக்கும் ஈமான் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
காலை முதல் மாலை வரை ஏர்வாடி சகோதரர்களின் உற்சாக வெள்ளம் கரை புரண்டோடியது.

இதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் ஈமானின் அனைத்து பணிகளிலும் சகோதரர்கள் அனைவரும் கலந்துக் கொள்வது இன்ஷா அல்லாஹ் நமது ஏர்வாடி அணி மறுமையில் வெற்றி பெற உதவிடும்.

PHOTOS: http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=71_2017_Cricket-I















Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..