கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் துணிகரம்! ரயில் சிக்னலை துண்டித்து பெண்களிடம் கொள்ளை

Posted by Haja Mohideen (Hajas) on 4/3/2017 10:12:59 AM

சிக்னலை துண்டித்து நள்ளிரவில் கொள்ளை..கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் துணிகரம்! சேலம் அருகே நள்ளிரவில் ரயில் சிக்னலை துண்டித்து கேரள எக்ஸ்பிரஸில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

By: Lakshmi Priya Published: Monday, April 3, 2017, 13:02 [IST]  

சேலம்: சேலம் அருகே நள்ளிரவில் ரயில் சிக்னலை வேண்டுமென்றே துண்டித்து கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்களிடம் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், மொரப்பூர், காட்பாடி வழியாக டெல்லிக்கு தினமும் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே மொரப்பூரை அடுத்த தொட்டம்பட்டி பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தது.

சிக்னல் கிடைக்கவில்லை

சிக்னல் கிடைக்கவில்லை

 

சிக்னல் கிடைக்காததால் ரயில் நடுவழியிலேயே நின்றது. அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எஸ் 3 உள்பட 5 பெட்டிகளில் கொள்ளையர்கள் 5 பேர் ஏறினர். தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் இருந்து நகைகளை பறித்தனர்.

அலறல் சப்தம்

அலறல் சப்தம்

பெண்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். எனினும் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அடர்ந்த பகுதிகளுக்குள் சென்று ஓடி ஒளிந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.    

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இது குறித்து தொட்டம்பட்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், சேலம் சந்திப்பு ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படை டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிக்னலுக்கு செல்லும் வயர் துண்டிக்கப்பட்டு கிடந்தது தெரியவந்தது.    

கொள்ளையர்கள் துண்டிப்பு

கொள்ளையர்கள் துண்டிப்பு

ரயிலில் ஏறி கொள்ளைில் ஈடுபடுவதற்காக கொள்ளையர்களே ரயிலின் சிக்னல் வயரை துண்டித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. நகைகளை பறிகொடுத்த பெண்கள் அவசரமாக டெல்லிக்கு செல்ல வேண்டியிருந்தால் மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி புகார் கொடுக்க மறுத்தனர். இதையடுத்து 45 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. அந்த ரயிலிலேயே சென்று ரயில்வே போலீசார் பெண்களிடம் புகாரை பெற்றுக் கொண்டனர்.

tamil.oneindia.com/news/tamilnadu/women-s-jewels-robbery-kerala-express-near-salem-278639.html






Other News
1. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
2. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
3. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
4. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
14. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..