Home >> News >> Detail
  Login | Signup  

கொட்டும் கனமழை... நிரம்பி வரும் தமிழக அணைகள்- விவசாயிகள் மகிழ்ச்சி

Posted by S Peer Mohamed (peer) on 9/21/2017 12:03:33 PM

 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டம் திற்பரப்பு அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் 156 அடி. நீர் இருப்பு, 88.91 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1913.43 கன அடி ஆகும்.

மணிமுத்தாறு அணையின் உச்சநீர்மட்டம் 118 அடி. நீர் இருப்பு, 43 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 807 கன அடி ஆகும்

பாபநாசம் அணை பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 143 அடி. நீர் இருப்பு, 83.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2804.72 கன அடி ஆகும். வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 304.75 கனஅடி.

குமரி மாவட்ட அணைகள் பேச்சிப்பாறை அணையின் மொத்த கொள்ளளவான 48 அடியில் தற்போது வரை 21 அடி நீர் வரத்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2086 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணியின் மொத்தக் கொள்ளளவான 77அடியில் தற்போது 45.10 அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1255 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணை
ஒரே நாளில் 124 அடியிலிருந்து 126.10 அடியாக உயர்த்துள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 3,856 மில்லியன் கன அடியாகவும், 218 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 142 அடியை விரைவில் எட்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மகிழ்ச்சியடைத்துள்ளனார்.

மேட்டூர் அணை கர்நாடகா, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மிதமான மழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.16 அடியிலிருந்து 77.39 அடியாக உயர்ந்துள்ளது.

வைகை அணை இதேபோல் வைகை அணை நீர் மட்டமும் 36.81 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 61 கன அடியாகவும், நீர் கொள்ளளவு 717 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து 40 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு, சோத்துப்பறை அணைகள் நிரம்பிவழிகின்றன.

பில்லூர் அணை நிரம்பியது
12,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சிறுவாணி அணை மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணை தற்போது 42 அடியை தாண்டி உள்ளது.

திருமூர்த்தி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக அருவிக்குச் செல்ல அறநிலையத் துறையினர் தடை விதித்துள்ளனர். 60 அடியாக உள்ள திருமூர்த்தி அணை நிரம்பி வருகிறது. இதேபோல 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை நீர்மட்டம் தற்போது 85 அடியாக உள்ளது. தொடர் மழை காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேஆர்பி அணை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை முழு கொள்ளளவான 52 அடி நீர் இருப்பில் 51 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 355 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.








Other News
1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed
3. 28-06-2020 நெல்லையின் நேர்மை குணம் - S Peer Mohamed
4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed
5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed
6. 28-06-2020 COVID-19 impact: 59 flights to take Indians home from UAE in phase 4 of Vande Bharat Mission - S Peer Mohamed
7. 28-06-2020 Abu Dhabi facilitates return of 180,000 workers in 3 months - S Peer Mohamed
8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..