கமலின் - நல்ல நேர்காணல்🙏🙏

Posted by Haja Mohideen (Hajas) on 9/24/2017 12:24:57 AM

 

Times Now ராகுல் சிவஷங்கர் கமல் அவர்களை எடுத்த பேட்டியின் பகுதிகளை அங்கொன்றும் இங்கொன்றும் பார்த்து, தற்போது தான் அதை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்லப்போனால், ராகுல் சிவ ஷங்கரின் மிக சிறப்பான, கமலை சமாளிக்கும் வித்தை அறிந்த விதமாக தான் முழு பேட்டியும் இருந்தது.

அவர் கேட்டது, பெரும்பாலும் rapidfire கேள்விகள், இதில் மட்டுமே தான் கமலை சிக்க வைக்க முடியும் என்பதை அவர் அறிந்திருக்கிறார், ஏனினில், கொஞ்சம் விட்டு பிடித்தால், கமல் சொல்ல வேண்டியதை விட்டு, வேறு எங்கெங்கோ போய் சாமர்த்தியமாக தப்பித்து கொள்ளும் நழுவுற மீன்.

பாண்டே கமலை எடுத்த பேட்டியில், பாஜக அராஜகங்கள் குறித்த கேள்விகள் இல்லாமல், மாநில கேள்விகள் மட்டுமே ஆக்கிரமித்தது, பேசி வைத்துக்கொண்டு எடுத்த இன்டெர்வியூ என்று நிறைய பேர் விமர்சனம் செய்திருந்தார்கள். அந்த குறை இந்த பேட்டியில் நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது. Rapidfire கேள்விகளில், கமலால் வெட்டொன்று துண்டு இரண்டு என்று பதில் சொல்ல முடியாமல் அவர் தொண்டைக்குழி குண்டு மேலும் கீழும் ஓடியது.

மாட்டு இறைச்சி அராஜகம், டீமானிடைசேஷன், மோடி ஆட்சி, கர் வாப்ஸி, போன்ற எந்த விவகாரத்துக்கும், தன்னோட நிலைப்பாட்டை சொல்வதற்கு கமலுக்கு இருந்த சங்கடம் வெளிப்படையாக தெரிந்தது. மாட்டு அரசியல் விவகாரத்தில் கூட தன்னோட நிலைப்பாடாக "எல்லாமே holy" ரக பதில்களை சொல்லி சமாளித்தார்.

கேட்கப்பட்டது நாட்டில் நடக்கும் cow vigilantism பற்றி, ஆனால் கமல் சொன்னது "தான் உயிர்களை எப்படி பார்க்கிறேன்" என்பதை பற்றி. இது தான் கமலின் தந்திரம். " its cruel , its atrocious " என்று கூட கமலால் சொல்ல முடியாது, ஆனால் ராகுல் எதிர்பார்த்தது இந்த நிலைப்பாடுகளை தான்.

ஓகே, இறுதியாக; கமல் தன்னோட அரசியல் விளையாட்டை மீடியா எதிர்பார்க்கும் விடையை தராமல் சாமர்த்தியமாக நழுவுகிறார் என்று வைத்து கொண்டாலும், ஒரு ஐந்தாண்டு ஆட்சியில் இருந்து விட்டு எதிர்கொள்கிற கேள்விகளுக்கான விடையாய் ஒரு தேர்ந்த அரசியல் வாதியை போல பதில் சொன்னாலும், அதில் அரசியல் தன்மை கலந்து இருந்தாலும், அது தான் நிதர்சனமாக இருக்கும், ஏனினில் அரசியல் சூழ்ச்சி, சறுக்கல் நிறைந்தது.

ஆனால் ஒரு புது வரவாக, எந்த இயக்கத்திலும் இல்லாத காற்றாற்றமான மடியில் கனமில்லாத சுதந்திரம் இருக்கும் போதே கமலால் ஒற்றை பதிலில் தன்னோட நிலைப்பாட்டை சொல்ல முடியாத போது, கமலுக்கு எதை பேச வேண்டும் எதை பேச கூடாது என்கிற கொள்கை இருக்கு, அதை இனி தான் கமல் நிறுவ போகிறார் என்பதில்லை, இதை கமலை தொடர்ச்சியாக கவனித்து வருகிறவர்களுக்கு தெரியும்.

எடப்பாடி, ஓபிஸ், செல்லூர் ராஜு, தனபால் போன்ற பிள்ளை பூச்சிகளை அடித்து கமல் தன் அரசியல் நிலைப்பாட்டை நிறுவுகிறாரே தவிர, ராகுல் சிவ ஷங்கரின் கேள்விகளான பாஜக வை சேர்ந்த சங்கீத் சோம், யோகி ஆதித்ய நாத், சாக்ஷி மஹராஜ் போன்றவர்களின் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மமான அறிக்கைகளை குறிப்பிட்டு கேட்ட போது, ரோலர் கோஸ்டாரில் நூறடி உயரத்தில் அரை நிமிடம் நிறுத்தி, மீண்டும் சர்ரென்று கீழ் இறங்கும் போது இருந்த பயம், கமலின் முகத்தில் தாண்டவமாடியது.

அதிலும், யோகி ஆதியநாத்தின் கடந்த காலத்து அச்சுறுத்தல் அறிக்கைகளை குறித்து கேட்ட போது, "நீங்க எதை கேக்குறீங்க தம்பி, கொஞ்சம் படித்து சொல்லுங்க" என்பதை போல அப்பாவியாக, தான் செய்தி தாள்களே படிக்காதது போலவே, அதையெல்லாம் முதல் முறை கேட்பதை போலவே கேட்டு தலையாட்டியது எல்லாம் கிளாசிக்

கமல் நீட்டி மொழுக நினைத்த போதெல்லாம், "நான் கேட்டது இவ்ளோ தான், அதுல உன் stand தெரிஞ்சிடிச்சி, நீ ஏன் பேசிட்டே இருக்க" என்று ராகுல் சிவசங்கர் அடுத்த கேள்விக்கு தாவியது, நானொன்னும் "சினேகன், ஆரவ், காயத்திரி, ஜூலி இல்ல" பேசுறதை கேட்டுட்டே இருக்க attitude.

நல்ல நேர்காணல்🙏🙏


https://youtu.be/I-q_XHNcwjY
இதோ கமலின் டைம்ஸ் நவ் முழு நேர்காணல் லின்க்.


https://www.facebook.com/Musicallybaskar/posts/10213224166214450






Other News
1. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
2. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
3. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
4. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
5. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
8. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
9. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
13. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
14. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
15. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
22. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed
29. 03-02-2024 காஸா-115: புதிதாக 9000 இஸ்ரேலியா இராணுவ வீரர்களுக்கு பைத்தியம். - S Peer Mohamed
30. 03-02-2024 காஸா-114: காஸாவில் இருந்து,மீண்டும் தோற்று ஓடிய இஸ்ரேல்... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..