Home >> News >> Detail
  Login | Signup  

குடுமி சண்டையிடும் AIRTEL-- JIO

Posted by Haja Mohideen (Hajas) on 2/22/2018 3:17:37 AM

 

 

தொலை தொடர்பு போட்டியால் தொலைந்து போகும் கம்பனிகள்

குடுமி சண்டையிடும் AIRTEL-- JIO
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
22-02-18--வியாழன் கிழமை
--------------------------------
J . Yaseen iMthadhi
==========

 

Image may contain: text

வணிகத்தில் போட்டி இருக்கலாம் அவ்வாறு போட்டி ஏற்பட்டால் அது பொது மக்களுக்கு நன்மைகளை அதிகம் பெற்று தரும் சந்தேகம் இல்லை

அதே நேரம் எந்த வணிகத்திலும் பொறாமை எனும் நஞ்சு அமைந்து விடக் கூடாது

அவ்வாறு அமைந்தால் அந்த நஞ்சு அவர்களையும் நாசமாக்கி அவர்களை நம்பி வேலை பார்க்கும் ஊழியர்களையும் பிற வணிகர்களையும் நாசமாக்கி விடும் என்பதற்க்கு தான் தற்போது நடைபெற்று வரும் JIO மற்றும் AIRTEL நிறுவனங்களின் குடுமி சண்டை

தற்போது இந்திய அளவில் தொலை தொடர்பு சிம் நிறுவனங்களுக்கு இடையில் எற்பட்டிருப்பது ஆரோக்யமான போட்டி அல்ல மாறாக ஒருவரை ஒருவர் அழித்து கொள்ள அவர்களே அவர்களுக்கு தோண்டிக்கொள்ளும் புதைகுழி தான்

இவர்களின் அநாகரீகமான போட்டியின் காரணமாக தொலை தொடர்பு கட்டணங்கள் மற்றும் டேட்டாக்கள் மலிவாக கிடைக்கிறது என்பதற்காக இது போன்ற ஆரோக்யமற்ற போட்டிகளை செயல்பாடுகளை அங்கீகரிப்பதும் ரசிப்பதும் சிறந்த பண்பாடு அல்ல

எந்த நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கீழ் வேலை பார்க்கும் பலர்களின் குடும்ப வருமானம் பாதிக்கப்படும் என்ற உண்மையை சிந்திக்க மக்கள் மறந்து விட கூடாது

நிறுவனங்கள் தடைபடுவதால் அதை நடத்தும் தொழில் அதிபர்கள் பாதிக்கப்பட போவது இல்லை

காரணம் அதன் மூலம் கோடான கோடிகளை அவர்கள் சம்பாரித்து கொண்டிருப்பதால் தான் இது போன்ற ஆரோக்யமற்ற போட்டிகளே நிலவுகிறது

அதே நேரம் அந்த நிறுவனங்களின் கீழ் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தான் சம்பளம் தடை பட்டு அல்லது வேலை இழந்து பாதிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்களாகிய நாம் நினைவில் வைக்க வேண்டும்

ஊழியர்களின் சம்பளம் கட்டிட வாடகைகள் மற்றும் இதர செலவினங்களை மையமாக வைத்து தொலை தொடர்பு நிறுவனங்கள் மக்களுக்கு சிரமம் தராத வகையில் பொதுவான ஒரு இலாபத்தை ஒன்று கூடி பேசி இதற்க்கு தீர்வு காண முன் வர வேண்டும்

தொலை தொடர்பு தரத்தை கூட்டி இதர நிறுனங்களை விட தங்களது கம்பனிகளை முன்னுக்கு கொண்டு செல்வது குற்றம் இல்லை

ஆனால் தரத்தை காட்டி பிற கம்பனிகளின் வயிற்றில் அடிப்பது கயமைத்தனம் என்பதை உணர வேண்டும்

JIOநிறுவனத்தால் AIRTEL போன்ற பிற நிறுவனங்கள் இதுவரை அடித்து வந்த கொள்ளை இலாபம் தடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை என்றாலும்

அதே JIO நிறுவனத்தால் பிற கம்பனிகள் அழிவை நோக்கி செல்கிறது என்பதை தற்போது மறுக்க இயலாது

இது போன்ற ஆரோக்யமற்ற சூழ்நிலை தொடர்வதை கண்டும் காணாதது போல் இருக்கும் மத்திய அரசாங்கம்

தனியார் கம்பனிகளுக்கு ஜால்ரா போட்டும் விளம்பரங்களை செய்து கொண்டும் இருக்காமல் அனைத்து கம்பனிகளும் நியாயமான வகையில் பொருளீட்ட வழிவகை செய்ய வேண்டும்

அரசாங்க நிறுவனமான BSNL தொலை தொடர்பின் பலவீனத்தால் தான் இந்த அவலநிலையே நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது என்பதை சிந்தனை உடைய எவரும் மறுக்க மாட்டார்கள்

ஒரு இணைப்பை பெற பல விதிமுறைகளை ஏற்படுத்தி மக்களுக்கு தந்த சிரமத்தின் எதிரொலி தான் இன்று BSNL நிறுவனமும் சந்தையில் கூவி கூவி காய்கறி விற்பனை செய்வதை போல் தங்களது சிம்மை விற்பனை செய்யும் அளவு நிலமை மாறிவிட்டது

எதிர்பார்ப்புடன் J .இம்தாதி

https://www.facebook.com/photo.php?fbid=1585914794855943&set=a.152465101534260.31470.100003123145585&type=3&permPage=1

 






Other News
1. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..! - S Peer Mohamed
7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
8. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ! - S Peer Mohamed
9. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
10. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
11. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
12. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
13. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
14. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
15. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
16. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
17. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
18. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
19. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
20. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
21. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
22. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
23. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
24. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
25. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
26. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
27. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
28. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
29. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
30. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..