Home >> News >> Detail
  Login | Signup  

அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ!

Posted by S Peer Mohamed (peer) on 2/19/2019 7:49:21 AM

டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதிட்ட அந்த 45 நிமிடம்தான், இந்த வழக்கின் தீர்ப்பையே மொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு பலரும் ஆதரவு அளித்து இருக்கின்றனர். இந்த வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதிட்டது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் மட்டுமில்லாமல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வைகோ இந்த வழக்கில் தீவிரமாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூடல்

தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ஒரு மனுதாரராக வைகோ தரப்பும் வாதம் செய்தது. பல முக்கிய ஆதாரங்களை வைகோ தரப்பு இதில் அளித்தது

ஆனால் தீர்ப்பு

ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வைகோவும் இன்னொரு மனுதாரராக மனுதாக்கல் செய்தார்.

மிக சுவாரசியம்

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக வைகோ சேர்த்துக் கொள்ளப்பட்டதே சுவாரசியமான விஷயம் ஆகும். உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன், வைகோவை இதில் மனுதாரராக சேர்ந்து கொண்டது ஒரு சுவாரசியமான நிகழ்வாகும். வைகோவின் மனுவை பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிங்க்டன் பாலி நாரிமன் வைகோவை பார்த்து சில கேள்விகளை எழுப்பினார். அதில், நீதிபதி ரோஹிங்க்டன்: நீங்கள் யார்? வைகோ: நான் வைகோ. நீதிபதி ரோஹிங்க்டன்: நான் அதை கேட்கவில்லை, இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். வைகோ: ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளேன். நீதிபதி ரோஹிங்க்டன்: சரி, உங்களுக்காக யார் வாதிட போவது. வைகோ: நான்தான் இதில் மனுதாரர், எனக்காக நானே வாதாட போகிறேன், என்று வைகோ கூறினார். அதன்பின் வைகோவின் மனுவும் நேரடியாக, உடனடியாக இதில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

என்ன நடக்க இருந்தது

இந்த வழக்கின் விசாரணையின் போது, வைகோ வாதம் வருவதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக பேசியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு அளிக்க வேண்டும். ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால் கடைசியில் தீர்ப்பும் கூட ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

வைகோ கோபம்

ஆனால் நீதிமன்றத்தில் அப்போதே வைகோ கோபமாக எழுந்து பேசினார், இது தவறான முடிவு. இதை ஏற்க முடியாது. நான் இன்னும் என்னுடைய தரப்பு வாதங்களை வைக்கவில்லை. நான் பேசிய பின் இந்த முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு 45 நிமிடம் பேச அனுமதி வேண்டும் என்றார். இதனால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, வைகோ பேச இன்னொரு நாள் அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டிற்கு மின் இணைப்பு அளிக்கும் உத்தரவும் நிறுத்தி வைக்கப்பட்டது.


வைகோ 45 நிமிடம்

அதன்பின் வைகோ செய்த வாதம்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடாமல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விசாரணையில் சரியாக அவர் சொன்னது போலவே 45 நிமிடங்கள் பேசினார். அதில் அவர் பேசிய சில விஷயங்கள், திருப்பூர் சாயப்பட்டறை வழக்கு, நொய்யல் ஆறு வழக்கு, வேலூர் தோல் தொழிற்சாலை வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறினார். நீர்நிலைகள் மாசாவதை ஆதாரங்களுடன் சமர்பித்தார். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எதை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை என்பதை பட்டியலிட்டார். விசாரணை கமிட்டி அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதி கிடையாது. ஆலை குறித்து விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையை ஏற்க கூடாது, என்றார். தமிழக அரசு இதில் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார். இப்படி 20க்கும் மேற்பட்ட புகார்களை அந்த 45 நிமிடம் வைகோ பட்டியலிட்டார்.

பெரிய டிவிஸ்ட்

வைகோவின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் அதிர்ந்து போனார்கள். அதன்பின்தான் வழக்கில் திருப்பம் வந்ததே. அதன்பின் நீதிபதிகள் ஸ்டெர்லைட் தரப்பிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். தற்போது அந்த 45 நிமிட வாதத்தின் விளைவாக மொத்த தீர்ப்பே ஸ்டெர்லைட்டிற்கு எதிராக வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






Other News
1. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
2. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
3. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
4. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
5. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
6. 16-03-2019 ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..! - S Peer Mohamed
7. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
8. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
9. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
10. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
11. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
12. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
13. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
14. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
15. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
16. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
17. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
18. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
19. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
20. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
21. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
22. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
23. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
24. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
25. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
26. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
27. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
28. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
29. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
30. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..