Home >> News >> Detail
  Login | Signup  

அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ்

Posted by S Peer Mohamed (peer) on 1/2/2020 6:39:24 AM

அறிமுகம் இல்லாத பெண்ணின் கற்பையும் மானத்தையும் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன்..

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமையன்று நடந்த ஒரு நிகழ்வு காட்சி ஊடக வெளிச்சத்தையும் பெறவில்லை.
அதனால், அரசியல்வாதிகளின் கவனத்தையும் அது ஈர்க்கவில்லை. ஒரு சாமானிய, அடித்தட்டு கிராமத்து இளைஞனின் பொறுப்புணர்வும், கடமையுணர்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அந்த இளைஞரின் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் அவரின் மறைவு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதுபோல, சரித்திரமாகப் போற்றப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் மாலை சுமார் 6 மணி அளவில், மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் நரசிங்கபுரம் செல்வதற்கு சாலையில் காத்திருந்தார்.

அந்த வழியாக ஷேர் ஆட்டோ ஒன்றில் அவர் ஏறினார். அவருடன் சில பயணிகளும் ஏறிக்கொண்டனர். ஏனைய பயணிகள் வழியில் இறங்கிவிட்ட நிலையில், அந்தப் பெண் மட்டும் வாகனத்தில் இருந்தார்.
அந்த வாகனம் நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி என்கிற பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக விரைந்தது. ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், வாகனத்தை நிறுத்துமாறு ஓட்டுநரை வலியுறுத்தினார். அதை அவர் பொருட்படுத்தாமல் விரைந்தபோது, அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார்.

கொண்டஞ்சேரியில் 22 வயது யாகேஷ் என்பவரும், அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், சார்லி பிராங்க்ளின் ஆகியோரும் சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோவிலிருந்து உதவி கேட்டு அந்தப் பெண் எழுப்பிய அலறலால் திடுக்கிட்ட அந்த இளைஞர்கள், உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவ தங்களது இரு சக்கர வாகனங்களில் அந்த ஷேர் ஆட்டோவை துரத்தத் தொடங்கினர்.
தனது வாகனத்தை சில இளைஞர்கள் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்த ஆட்டோ ஓட்டுநர், மேலும் வேகமாக விரைய முற்பட்டார். ஓர் இடத்தில் எதிரில் வந்த வாகனத்திற்காக சற்று மெதுவாகச் சென்றபோது அந்தப் பெண் வாகனத்திலிருந்து சாலையில் குதித்துவிட்டார். அந்த ஷேர் ஆட்டோ நிற்காமல் விரைந்தது. இதற்குள் மூன்று கி.மீ. தூரம் அந்த ஷேர் ஆட்டோ
பயணித்திருந்தது.

தனது ஏனைய நண்பர்களை அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பணித்துவிட்டு, யாகேஷும், சார்லி பிராங்க்ளினும் அந்த ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். அந்த ஷேர் ஆட்டோவைக் கடந்து சென்று வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பிடிபடுவோம் என்று தெரிந்ததும் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர், யாகேஷ் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதித் தள்ளிவிட்டு விரைந்துவிட்டார்.
அதனால் படுகாயமடைந்த யாகேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட யாகேஷ், சனிக்கிழமை இரவு உயிர் நீத்தார்.

பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்கிற ஷேர் ஆட்டோ ஓட்டுநரை மப்பேடு போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட பெண், பெரிய அளவில் காயமில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் நடந்த சம்பவம்.

இதே நிகழ்வு தேசியத் தலைநகர் தில்லியிலோ, மாநிலத் தலைநகர் சென்னையிலோ நடந்திருந்தால் நேற்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாகி இருக்கும். காட்சி ஊடகங்களின் ஒட்டுமொத்த கவனமும் யாகேஷின் மீதும், சம்பவத்தின் மீதும் குவிந்திருக்கும். அந்தப் பெண், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியராகவோ அல்லது நகர்ப்புறவாசியாகவோ இருந்திருந்தால், பெண்ணிய அமைப்புகள் எல்லாம் அவருக்காகக் குரல் எழுப்பியிருக்கும். யாகேஷின் தியாகம் சமூக ஊடகங்களில் "டிரெண்டிங்'காக மாறியிருக்கும்.

ஆனால் என்ன செய்வது? இந்தியாவின் ஏதோ ஒரு மூலையிலுள்ள குக்கிராமத்தில் நடந்த நிகழ்வாக இருப்பதால், இது குறித்து ஊடகங்களும் கவலைப்படவில்லை, அரசியல்வாதிகளும் வரிசை கட்டி நின்று யாகேஷின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து இழப்பீடுகள் வழங்கி விளம்பர வெளிச்சம் பெறவில்லை.

தமிழகத்தில் பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டுதோறும் 20,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 2% அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 15 நிமிஷத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகச் சுட்டிக் காட்டுகிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.
காவல் துறையினரால் மட்டுமே இதைத் தடுத்துவிட முடியாது.

மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வால் மட்டும்தான் பாலியல் குற்றங்களுக்குத் தீர்வு காண முடியும் என்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி இருந்தும்கூட, யாகேஷ் போன்று துணிந்து தவறைத் தட்டிக் கேட்கவும், போராடவும் நமது இந்தியச் சமூகம் தயாராகாமல் இருப்பதுதான், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மிக முக்கியமான காரணம். யாகேஷ் போன்ற 100 இளைஞர்களைத்தான் இந்தியாவை மாற்றியமைக்க சுவாமி விவேகானந்தர் கேட்டார்.

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் காட்டியிருக்கிறார் மறைந்த கொண்டஞ்சேரி யாகேஷ். பெண்மையின் கற்பையும் மானத்தையும் பாதுகாக்க தனது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கும் யாகேஷின் துணிவுக்கு "தினமணி' தலைவணங்குகிறது என்று தினமணி நாளிதழ் பதிவு செய்துள்ளது.

குறிப்பு;யாகேஷ் அவர்களின் ஆன்மா சாந்தி யடைய இறைவனைப் பிரார்த்திப்போம். இந்த குடும்பத்தினருக்கு உதவி செய்ய,ஆறுதல் கூற எந்த அரசியல்வாதியும் செல்லமாட்டான்..நல்லவர்களை ஊக்குவிக்க மாட்டார்கள்.முகநூல் நண்பர்களாவது பிரார்த்தனை செய்வோம்.அவர்களின் குடும்ப சூழல் தெரிந்தால் உதவி செய்வோம்.

https://www.facebook.com/rajappa.thanjai/posts/1017844895236975

 








Other News
1. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
2. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
3. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
4. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
5. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed
6. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed
7. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி!' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed
8. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed
9. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed
10. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed
11. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed
12. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed
13. 26-01-2020 Padma Shri: 82-Year-Old Sharif Chacha, Has Performed Last Rites Of Over 25,000 Unclaimed Bodies - S Peer Mohamed
14. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல ? வீண் செலவு? - Haja Mohideen
15. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen
16. 31-12-2019 CAA/NRC - கோலம் போடும் போராட்டம் - S Peer Mohamed
17. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen
18. 29-12-2019 குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி: முஸ்லிம்கள் பிரமாண்ட பேரணி - 650 அடி நீள தேசிய கொடி - S Peer Mohamed
19. 25-12-2019 சுபாஷ் சந்திரபோஸ் சகோதரர் வாரிசு - சந்திர குமார் போஸ் - பாஜக தலைவர் அவர்களின் நியாமான கேள்வி - S Peer Mohamed
20. 22-12-2019 South Asian students join anti-CAA protests outside Indian mission in London - S Peer Mohamed
21. 22-12-2019 From NYU to University of London, Students Protest CAA in Freezing Cold - S Peer Mohamed
22. 22-12-2019 Indian Diaspora Stage Anti CAA-NRC Protest March In Germany (Video) - S Peer Mohamed
23. 22-12-2019 Indians in Finland raise slogans, read Preamble at anti-CAA protest in Helsinki - S Peer Mohamed
24. 22-12-2019 Best posters from CAA Protest - 2 - S Peer Mohamed
25. 22-12-2019 Best posters from CAA Protest - 1 - S Peer Mohamed
26. 20-12-2019 CAB, NRC யை விட கொடுமையான சட்டம் வந்துவிட்டது ? | THUPPARIYUM SHAMBU | My Name is RED - S Peer Mohamed
27. 20-12-2019 CAB - அருமையான விளக்கம்: திருமாவின் அற்புதமான விளக்கம்: - வீடியோ - S Peer Mohamed
28. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்: பேராசிரியர் சுந்தரவள்ளி பேச்சு - வீடியோ - S Peer Mohamed
29. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA போராட்டம்- நாங்கள் இந்துக்கள் ஆனால் இந்துத்துவாக்கள் இல்லை - வீடியோ - S Peer Mohamed
30. 20-12-2019 வள்ளுவர் கோட்டம் CAA மக்கள் போராட்டம்: வீடியோ-1 - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..