Home >> News >> Detail
  Login | Signup  

EMAN :அமீரக ஈமான் கிரிக்கெட் 2020

Posted by S Peer Mohamed (peer) on 2/12/2020 4:30:43 PM

 07.02.2020 அமீரகத்தில் மற்றுமொரு வெள்ளியாக மற்றவருக்கு இருந்தது. ஆனால் ஏர்வாடி சகோதரர்களுக்கு கொண்டாட்டம், குதூகலம், சகோதரத்துவமாக மலர்ந்தது. அல்லாஹ் வின் மாபெரும் கிருபையால் அன்று துபை நஹ்தா பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து ஈமான் சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளே இந்த கொண்டாட்டம், குதூகலம், சகோதரத்துவத்திற்கு காரணம்.

கிரிக்கெட், வாலிபால், கேரம் என விளையாட்டுக்களுடன், மதிய விருந்துடன் கூடிய இந்த மகிழ்வான நிகழ்வில் ஏறத்தாழ 90 ஏர்வாடி சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ஈமான் 2020 கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் நான்கு அணிகள் பங்கேற்றன.

Abudhabi Wolves – ADW கேப்டன் - யூசுப்
Burdubai Knights - BDK கேப்டன் - அக்ரம்
Sharjah Smashers – SS கேப்டன் - ஜைனுல்
Deira Lions - DL கேப்டன் - ஹசன்

ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் தலா 2 வெற்றிகள் பெற்ற அபுதாபி மற்றும் பர்துபை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.இறுதி போட்டிக்கு அக்ரம் தலைமையிலான Burdubai Knights அணியும் யூஸுப் தலைமையிலான Abudhabi Wolves அணியும் தேர்வாகி ஈமான் 2020 க்கான சுழற்கோப்பை யை யார் தட்டி செல்வது என்ற பலப்பரிசைக்கு களம் கண்டது.

டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பேட்டிங் செய்தது. தனது அபார ஆட்டத்தால் 5 ஒவர்களில் 49 ரன்கள் அடித்தது. 50 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய பர்துபை விரைவாக இலக்கை நோக்கி பயணித்தது. ஆனாலும் இறுதியில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 42 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

அபுதாபி அணிக்கு மிகுந்த சவாலாக திகழ்ந்த பர்துபை அணி வெற்றி வாய்ப்பை தக்க வைக்க இறுதி வரை போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அபுதாபி அணி ஈமான் 2020 சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. அபுதாபி அணியின் கேப்டன் யூசுப் அவர்கள் வெற்றிக் கோப்பையை பெற்றுக்கொண்டார்.

இறுதி போட்டியில் தோல்வியடைந்த பர்துபை அணிக்கு ஈமான் 2020 ரன்னர்அப் சுழற்கோப்பை வழங்கப்பட்டது இந்த லீக் ஆட்டங்களில் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கான சிறப்பு விருதுகளை கீழ்காணும் வீரர்கள் தட்டி சென்றனர்.

ஆட்ட நாயகன் : ரிஸ்வான்
அதிக ரன்கள் : மீரான்
அதிக விக்கெட்கள் : ஹூசைன்
தொடர் நாயகன் : இசக்கி ராஜா

அஷ்ரஃப் காகா (புதுமனை) போட்டிகளில் நடுவராக இருந்து சிறப்பித்தது 90 களில் ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த போட்டிகளை அக்கால கிரிக்கெட்டர்களுக்கு நினைவூட்டி மகிழ்வூட்டியது.

கிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளை ஜெய்னுல் தலைமையிலான ஈமான் விளையாட்டு குழு சிறப்பாய் செய்திருந்தது. சகோதரர் அக்ரம் போட்டிக்கான பதிவுகள் மற்றும் போட்டி நடைபெறும் போது ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் அப்டேட் ஏற்பாடுகள் புதுமையாகவும் ஹைலைட்டாகவும் அமைந்தது. (குறிப்பு : லீக் ஆட்ட்ங்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கும் ஸ்கோர் போர்ட் விபரங்களுக்கும் கீழுள்ள செய்தியை பார்க்கவும் )

ஒருபுறம் சமகால கிரிக்கெட் வீரர்கள் ஈமான் 2020 சுழற்கோப்பைக்கான பலப்பரிட்சையில் இருக்கும்போதே மைதானத்தின் மறுபுறம் முன்னால் கிரிக்கெட் வீரர்களும் வருங்கால கிரிக்கெட் வீரர்களும் தத்தமது திறமைகளை வெளிக்காட்டி ஆச்சரியப்படுத்தினர்.

வாலிபால் களத்தில் களமாடிய வீரர்களில் சூப்பர் சீனியர் வீரர்களான சகோ.AM பீர், சகோ பேங்க் கனி, சகோ துபை டிவி பீர் போன்றோர் சமகால வீரர்களுக்கே டஃப் கொடுத்தது மட்டுமல்லாமல் வாலிபாலுக்கான பெஸ்ட் அட்டாக்கர் மற்றும் பெஸ்ட் சர்வீஸ் க்கான கோப்பைகளையும் தட்டி சென்றனர்.

கேரம் விளையாட்டில் ஃபர்ஹான் /ஷஃபீக் அணி மற்றும் அபூபக்கர் / அஹ்மத் முஹைதீன் அணிகள் கோப்பையை தட்டி சென்றது திட்டமிட்ட இந்த நிகழ்ச்சி வானிலை காரணங்களால் தொடர்ச்சியாக மாற்றியமைத்திருந்த நிலையில் 90 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்குகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.

வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளில் ஈமான் நிர்வாகிகள் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சிட்டி கோல்ட் துபை யின் நிர்வாக மேலாளர் சகோ. ஜாஃபர் ஆகியோர் சுழற்கோப்பைகளை வழங்கி வீரர்களை கவுரவித்தனர்.

நிகழ்வில் பேசிய அமீரக ஈமான் தலைவர் சகோ ஹனீஃப் வருடாந்திரம் நாம் நடத்தும் இதுபோன்ற கிரிக்கெட் விளையாட்டு சந்திப்புகள் மூலமாக நமதூர் மக்களுக்கான அறிமுகம் மற்றும் நல்லதொரு புரிந்துணர்வுகளும் ஏற்படுகிறது என்றும் விளையாட்டுக்களின் மூலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் உள்ள கோட்டா முறைகளை எடுத்து கூறியும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை முறைப்படி தேவையான பயிற்ச்சிகளை கொடுத்து தயார் செய்ய வேண்டும் எனவும் ஊரிலும் அமீரகத்திலும் இதனை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகளை வழங்குமாறும் கேட்டு கொண்டு, ஈமான் அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுழற்கோப்பைகளை ஸ்பான்ஸர் செய்த சிட்டி கோல்ட் துபை நிறுவனத்தார்களுக்கும் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

ஈமான் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட இளந்தலைமுறையினர் தொடர்ந்து ஈமானின் அனைத்து அறப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தி இறைவனருளால் ஈமானை மேலும் வலுப்படுத்துவர். நிகழ்ச்சிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள்,ரெஃப்ரஷ்மெண்ட், மதிய உணவு போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் ஈமான் ஈவெண்ட் மேனெஜ்மெண்ட் டீம் சகோ அமீர் புஹாரி தலைமையில் சகோதரர்கள் முஹைதீன்( சிட்டி கோல்டு,) அக்ரம், அல்தாப், தெளபிக், ஜெய்னுல், ஷபீக், அஹ்மத் முகைதீன், அப்துல் பாஸித், ஹசன், அபுபக்கர் கொண்ட தன்னார்வலர்கள் குழு சிறப்பாய் செய்திருந்தனர்.

Cricket Score: https://cricheroes.in/tournament/94148/ERUVADI-PREMIER-LEAGUE-2020

Photos: 
http://nellaieruvadi.com/eman/photos.asp?dNam=61_2020_Sports_Day-I

http://nellaieruvadi.com/eman/photos.asp?dNam=61_2020_Sports_Day-II






Other News
1. 04-08-2020 ஊரில் இப்போ சாரல்... தெருக்கள் எங்கும் தூறல். - S Peer Mohamed
2. 25-07-2020 ஏர்வாடி மெர்ஸி டாக்டர்ஜெயச்சந்திர பாண்டியன் அவர்களின் மறைவுக்கு இரங்கள்கள் - S Peer Mohamed
3. 24-07-2020 மெர்ஸி மருத்துவமணை மருத்துவர் #ஜெயசந்திர #பாண்டியன் மறைவு - S Peer Mohamed
4. 22-07-2020 ஏர்வாடியில் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாசிங் மெசின் பழுதுபார்க்க - S Peer Mohamed
5. 22-07-2020 ஏர்வாடியில் புதிய உதயம்: பிட்சா மற்றும் கபாப் - S Peer Mohamed
6. 22-07-2020 ஏர்வாடி சார்பாக ஏர்வாடியில் ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மாத்திரை இலவச விநியோகம் - S Peer Mohamed
7. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
8. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed
9. 28-06-2020 நெல்லையின் நேர்மை குணம் - S Peer Mohamed
10. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed
11. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed
12. 28-06-2020 COVID-19 impact: 59 flights to take Indians home from UAE in phase 4 of Vande Bharat Mission - S Peer Mohamed
13. 28-06-2020 Abu Dhabi facilitates return of 180,000 workers in 3 months - S Peer Mohamed
14. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
15. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
16. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
17. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
18. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
19. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
20. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
21. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
22. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
23. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
24. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
25. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
26. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
27. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
28. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
29. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
30. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..