Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித்
Posted By:Hajas On 12/8/2014 8:27:08 AM

entresto

entresto

வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித்

கி.பி.
1526 : பாபர் அவர்களால் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது.

1528 : பாபரின் தளபதி மீர்பக்கி அவர்களால் அயோத்தியில் பள்ளிவாசல் கட்டப்பட்டது.

1853 : முதன்முதலாக பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சை எழுப்பப்பட்டது.

1855 : பள்ளிவாசலின் ஒரு பகுதி நிலம் ராமபக்தர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலரால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டது.

1857 : ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட நிலத்தில் “ராம்சபுத்ரா” கட்டப்பட்டு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கினர்.

1859 : ஆக்கிரமித்துச் கட்டப்பட்ட நிலத்திற்கும் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு தடுப்பு வேலி அமைத்து முஸ்லிம்கள் பள்ளிவாசல் உள்ளேயும் ராமபக்தர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்திலும் வழிபாடு நடத்திட ஏற்பாடு செய்தது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம்.

1947 : இந்திய விடுதலை மற்றும் பிரிவினை ஏற்படுகிறது. பிரிவினை காரணமாக கட்டுக்கடங்காத வகுப்புக் கலவரங்கள்
நடைபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக…

1949 : மே மாதம் 22 அன்று அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு முஸ்லிம்கள் வரும்போது பள்ளிவாசலின் கதவு உடைக்கப்பட்டு மிம்பரில் (உரை நிகழ்த்தும் மேடை) ராம, சீதை சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
சிலையை அகற்றிட பிரதமர் நேரு உத்தரவிடுகிறார்.
அதை அயோத்தியின் துணை ஆணையர் ரி.ரி. நய்யார் மறுத்து பள்ளிவாசலை பூட்டி அந்த இடத்தை சர்ச்சைக்குரிய பகுதி என்று அறிவிக்கிறார். இதற்குப் பரிசாக ரி.ரி. நய்யார் ஜனசங்கம் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டார்.

1949 : இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்றனர்.

1959 : நிர்மோகி அகாரா என்கிற துறவியர் அமைப்பு அது எங்களுக்கு சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கின்றது.

1961 : சன்னி வக்ஃபு வாரியம் இது எங்களுக்குச் சொந்தமான இடம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர்.

1984 : கோவில் கட்டப் போகிறோம் என்று விஸ்வ ஹிந்த் பரிஷத் அறிவிக்கிறது. இதனால் மத மோதல் உருவாகும் சூழல்ஏற்படுகிறது.

1986 : ராஜீவ் காந்தியின் ஆதரவின் பேரில் பள்ளிவாசல் உள்ளே வைக்கப்பட்ட சிலையை பூஜை செய்ய பைசாபாத் நீதிமன்றம் அனுமதியளிக்கிறது. தொடர்ந்து பாபர் மஸ்ஜித் நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டது.

1989 : விஸ்வ ஹிந்த் பரிஷச் சார்பில் பள்ளிவாசலுக்கு அருகில் கோயில் கட்டிட அடிக்கல் நாட்டப்பட்டது.

1990 : விஸ்வ ஹிந்த் பரிஷத் அமைப்பினரால் பள்ளிவாசலுக்கு சற்று சேதாரம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து அத்வானி ரதயாத்திரையை சோமநாதர் ஆலயத்திலிருந்து அயோத்தி வரை நடத்திமதவெறியைத் தூண்டிவிட்டார்.

1991 : கோயில் கட்டிட நாடு முழுவதும் செங்கல் கற்களுடன் சங்பரிவார் அமைப்பினர் திரண்டனர். தமிழகத்தில் இருந்து செல்வி ஜெயலலிதாவின் வாழ்த்துகளோடு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.

1992 : டிசம்பர் – 6 : வெறியூட்டப்பட்ட சங்பரிவார் அமைப்பினர் பள்ளி வாசலை இடித்து தரைமட்டமாக்கினர். அத்து
டன் தொடர்ச்சியாக உணர்வுகள் தூண்டலினால் நாடு முழுவதும் திட்டமிடப்பட்டு மதக்கலவரத்தைத் தூண்டி முஸ்லிம்கள் 3 ஆயிரம் பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர்.

1992 : இடிக்கப்பட்ட பள்ளிவாசல் அதே இடத்தில் கட்டித் தரப்படும் என்று இடிப்பதற்கு அன்று துணை நின்ற காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அறிவித்தார்.

1992 : டிசம்பர் 16 மஸ்ஜித் இடிப்பிற்கு ஆதாரம் பல இருந்தும் யார் காரணம் என்று ஆய்வு செய்திட நீதிபதி லிபரஹான் கமிஷன் அமைக்கப்பட்டு உண்மையின் மீது கல்லைத் தூக்கிப் போட்டார்கள்.

1993 : 1947-இல் எவையெல்லாம் வழிபாட்டுத் தலங்களாக இருந்தனவோ அவை அப்படியே தொடரும் என்று ஒரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டது.

2002 : மார்ச் 15-இல் கோயில் வேலை தொடங்கும் என்று விஸ்வ ஹிந்த் பரிஷத் அறிவித்தனர்.

2002 : பிப்ரவரி 27 அன்று குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டனர். பல்லாயிரம்கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

2002 : ஏப்ரல். 3 நீதிபதிகள் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வு மஸ்ஜித் அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்கிற விசாரணையைத் தொடங்கியது.

2003 : மஸ்ஜித் இடத்தில் கோயில் இருந்ததா என்று ஆய்வு செய்திட தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2009 : 1992-இல் போடப்பட்ட லிபரஹான் கமிஷன் “மிக விரைவாக” ஆய்வு செய்து 16 வருடங்கள் கழித்து ஆய்வறிக்கை தந்தது.

2010 : செப் 30, இடிக்கப்பட்ட பள்ளிவாசல் நிலத்தை உரிமை ஆவணங்கள் அடிப்படையில் அல்லாமல் மூன்றாக பிரித்து
தீர்ப்பளித்து அரசியலமைப்புச் சட்டத்தின் முகத்திலும் இந்திய ஜனநாயகத்தின் முகத்திலும் கரியைப் பூசியது.

https://www.facebook.com/ukhmz/posts/10205011214657034




General Knowledge
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..