உலக கைகழுவும் தினமும்; உன்னத மார்க்கமும்

Posted by Kashif (sohailmamooty) on 10/21/2009

உலக கைகழுவும் தினமும்; உன்னத மார்க்கமும்

அக்டோபர் பதினைந்தாம் தேதி 'உலக கை கழுவும் தினம்' அனுஷ்டிக்கப்பட்டதை நாமெல்லாம் அறிவோம். இந்த கை கழுவுவதை வலியுறுத்துவதன் நோக்கம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பெரும்பாலான நோய்கள் கைகளின் தூய்மையின்மையால் ஏற்படுகிறது. கைகளில் நம்மையும் அறியாமல் பரவியிருக்கும் அசுத்தத்தின் காரணமாக, நாம் கையை சுத்தம் செய்யாமல் நமது உடலின் ஏனைய பகுதிகளை தொடுவதாலும், கைகளை சுத்தம் செய்யாமல் உணவு உட்கொள்வதாலும் உடல்ரீதியாக பல்வேறு நோய்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது. மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு அவனது முழு உடல் தூய்மை மிகஅவசியம். அதிலும் குறிப்பாக கைகளின் தூய்மை மிக மிக அவசியம். எனவே இஸ்லாம் இந்த தூய்மையை என்றோ அனுஷ்டிக்கும் ஒரு சடங்காக சொல்லாமல், அன்றாடம் மனித வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் தூய்மையை கடமையாகவே ஆக்கியிருப்பதை காணலாம்.
தொழுகையில்....
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆண்-பெண் அனைவர் மீதும் தொழுகை கடமை என்பதை அனைவரும் அறிவோம். அந்த தொழுகை நிறைவேற வேண்டுமானால் 'உளூ' எனும் சுத்தம் மிகமிக அவசியம். அல்லாஹ் கூறுகின்றான்;


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ وَإِن كُنتُم مَّرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاء أَحَدٌ مَّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاء فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهَّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள் ;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.[5:6 ]
இந்த வசனத்தில் 'உளூ' எனும் அங்கசுத்தி செய்தல், உடலுறவு செய்வதன் மூலம் குளிப்புகடமையானால் குளித்தல் அல்லது தயம்மும் செய்தல் ஆகிய கடமைகளை வலியுறுத்திய இறைவன், இதன் மூலம் அல்லாஹ் உங்களை தூய்மைப்படுத்த நாடுகிறான் என்று கூறுவதன் மூலம் இஸ்லாம் தூய்மையை எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

குளிப்பு கடமையான நிலையில் தூங்க நாடினால்....
'

நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் தூங்கியிருக்கிறார்களா?' என ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளூச் செய்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்..[புஹாரி]


இல்லற வாழ்க்கையில் ஈடுபடும்போது அதன் மூலம் ஏற்படும் அசுத்தங்களை களையும் பொருட்டு நபி[ஸல்] அவர்கள் உளூ செய்து தூங்கியிருக்கிறார்கள். அவ்வாறே முஸ்லிம்களும் பணிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இங்கும் தூய்மை வலியுறுத்தப்பட்டுள்ளதை காணலாம். மேலும் உடலுறவு கொள்ளாமல் சாதரணாமாக தூங்க நாடினாலும் அப்போதும் உளூ செய்யுமாறு நபி[ஸல்] அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்;

'நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் 'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்' என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆம்விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.[புஹாரி]

குளிப்பு கடமையான நிலையில் உண்ண நாடினால்....


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உண்ண அல்லது உறங்க விரும்பும் போது உலூச் செய்து கொள்வார்கள். குளிப்புக் கடமையாக இருக்கும் போது (அவ்வாறு செய்தார்கள்) என்பதையே அவர்கள் குறிப்பிட்டார்கள்.[அபூதாவூத்]

மீண்டும் உறவுகொள்ள நாடினால்...
உங்களில் ஒருவர் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக! என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)[அபூதாவூத்]

சிறு நீர் கழித்தால்....

.
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, தனது வலது கையால் தனது மர்மஉறுப்பைத் தொட வேண்டாம். மேலும் அவர் கழிப்பிடத்திற்கு சென்றால், தனது வலது கையால் சுத்தம் செய்ய வேண்டாம், மேலும் அவர் நீர் அருந்தினால் ஒரே மூச்சில் நீர் அருந்த வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்.[புஹாரி]
இவ்வாறாக அன்றாடம் தூய்மையை வலியுறுத்தும் ஏராளமான விஷயங்களை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளது. அதில் சிலவற்றை மட்டுமே இங்கு மேற்கோள் காட்டியுள்ளோம். ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்தாலே அவன் தூய்மையானவனாகவும், ஆரோக்கியமானவனாகவும் திகழ்வான் [இறைவன் நாடியவை நீங்கலாக] என்பதில் ஆச்சரியமில்லை.






Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..