|
திருவரங்கநேரி கிராமத்தின் பத்திரப் பதிவிற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடை நீக்கம்
திருவரங்கநேரி கிராம (ஏர்வாடி) மக்கள் பத்திரப் பதிவை மேற்கொள்ளவிடாமல் ஆகஸ்டு 2003 முதல் திரு.ஜீயர் மடம் திருக்குறங்குடி ஆல் இடைக்கால தடை பெறப்பட்டிருந்தது. அந்த தடையை ரத்து செய்து உயர் நீதி மன்றம் சென்னை 17-12-2009 அன்று உத்தரவிட்டுள்ளது. எனவே சம்பத்தப்பட்ட துறைகளுக்கு தீர்ப்பின் விபரம் சென்றடைந்தவுடன் ஏர்வாடியின் அனைத்து பகுதிகளுக்கும் பத்திரப் பதிவை மேற்கொள்ளலாம்.
மேற்கண்ட தடையை நீக்க அரும்பாடு பட்ட அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஏர்வாடி பொது மக்களாகிய நாம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம்.
வருங்காலங்களில் அனைவரும் ஒன்றினைந்து பாடுபட்டால் கூட்டு பட்டாவை நீதி மன்றம் மூலமே உடைத்து தனிப்பட்டாவாக்க முடியும்.
|