விவசாயம் செய்ய தயார் நிலையிலுள்ள
ஏர்வாடி - வள்ளியுர் ரோடு
இராதபுரம் கோட்டத்திற்குட்பட்ட ஏர்வாடி - வள்ளியுர் மெயின் ரோட்டில் அன்னை சர்வீஸ் சென்டர் மற்றும் மங்களம் கேஸ் குடோனுக்கு அருகில் விபத்துக்கள் ஏற்படும் அளவிற்கு சாலை பழுதடைந்துள்ளதால் போக்குவரத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலான பகுதி என்பதை உணர்த்தும் வகையிலும், மேலும் அப்பகுதி தற்போதுள்ள நிலையில் உடனடியாக விவசாயம் செய்யும் வகையில் இருந்ததால் மனித நேய மக்கள் கட்சியின் ஏர்வாடி கிளை சார்பாக விவசாயம் செய்யும் நோக்கில் வாழை மரங்கள் நடப்பட்டுள்ளன.
நாங்குநேரி - ஏர்வாடி மெயின்ரோடும் விவசாயம் செய்ய ஏற்றதாக தயராகிக் கொண்டிருக்கிறது
பல்வேறு வகைகளில் ஏர்வாடி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் ஏர்வாடி பொது மக்களிடம் வரும் தேர்தல்களில் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப்போட விருப்பமில்லை (பிரிவு 43 'ஓ") என்ற பிரிவைப் பயன்படுத்தும் அளவில் தள்ளப்பட்டுள்ளார்கள்.
|