பொதுமக்களிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், லஞ்சம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என் செல்போனில் புகார் செய்யலாம் என்றார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடமையை செய்ய லஞ்சம் கேட்பது பெரிய குற்றம். காவல்துறையினர் பொது மக்களிடம் லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என் செல்போனில் (9840983832) புகார் செய்யலாம் என்றார்.