ஏர்வாடி : மின்சாரம் தாக்கி வாலிபர் பலி உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்

Posted by Haja Mohideen (Hajas) on 11/12/2012

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்

நவம்பர் 12,2012,03:02 IST

 

ஏர்வாடி:ஏர்வாடியில் மின்சாரம் தாக்கி இறந்தவர் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உறவினர்கள் உடலுடன் மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஏர்வாடி 9ம் தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரா சாகிப். ஏர்வாடி பஸ் ஸ்டாப் அருகே எஸ்டிடி., பூத் மற்றும் விழா காலங்களில் வெடிக்கடையும் நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்து வருகிறார். தற்போது அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக கடைக்கு தனது கடைக்கு எதிரே உள்ள உறவினரான சலீம் என்பவரது கடையில் உள்ள இன்வெட்டரில் இருந்து மின்சாரம் கொண்டு வர முடிவு செய்தார்.அதற்காக மின்வயரை இழுப்பதற்காக ஏர்வாடி 3வது தெருவை சேர்ந்த சலாகுதில் மகன் பீர் (30) என்பவரை வேலைக்கு அழைத்துள்ளார்.

சலீம் கடையில் இருந்து, நாகூர் மீராசாகிப் கடைக்கு குறுக்கே உள்ள ரோட்டை கடப்பதற்காக வயரை உயரமாக இழுப்பதற்கு அருகிலுள்ள கொடிகம்பம் மீது பீர் ஏறியுள்ளார். அப்போது அருகே உள்ள உயரழுத்த மின்சார கம்பி மீது கொடிக்கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி பீர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பறிதாபமாக இறந்தார்.இதுகுறித்து திருவரங்கநேரி வி.ஏ.ஓ.(பொறுப்பு) பாலன் அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் 174வது பிரிவின் கீழ் விபத்து என வழக்குப்பதிவு செய்து பீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து உடலை மீண்டும் ஏர்வாடிக்கு கொண்டு வந்த அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்யவேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு நாங்குநேரி டிஎஸ்பி., கோவிந்தராஜ், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்மந்தப்பட்ட கடைக்காரர்கள் நாகூர் மீராசாகிப், சலீம் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பின் மறியலில் ஈடுபட்டவர்கள் உடலை எடுத்துக்கொண்டு அடக்கம் செய்ய புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த வழக்கில் தொடர்புடைய சம்பந்தப்பட்ட நாகூர் மீரா சாகிப் மற்றும் சலீம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


http://www.dinamalar.com/district_detail.asp?id=584562






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..