Home >> News >> Detail
  Login | Signup  

30-ம் தேதி காலை 11 மணிக்கு அப்துல் கலாமின் உடல் அடக்கம்

Posted by Haja Mohideen (Hajas) on 7/28/2015 12:31:51 PM

30-ம் தேதி காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அப்துல் கலாமின் உடல் அடக்கம்
ராமேஸ்வரம் - மதுரை சாலையில் பேய்கரும்பு கிராமத்தில் 1.85 ஏக்கர் இடம் தேர்வு 
=======================================================

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நாளை மறுநாள் (30-ம் தேதி) காலை 11 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஷில்லாங்கில் இருந்து கவுகாத்தி நகருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் நண்பகல் சுமார் 12.30 மணியளவில் புதுடெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்துக்கு அவரது உடல் வந்துசேர்ந்தது.

சுமார் 12.45 மணியளவில் அப்துல் கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், முப்படைகளின் தளபதிகள், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முப்படை தளபதிகளின் முன்னிலையில் அணிவகுப்பு மரியாதையுடன் அங்கிருந்து துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அப்துல் கலாமின் உடல் புதுடெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

10- ராஜாஜி மார்க் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமான பல்துறை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் டுவிட்டர் வழியாக அவருக்கு புகழஞ்சலி சூட்டி வருகின்றர்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கான இடம் ராமேஸ்வரம் - மதுரை சாலையில் பேய்கரும்பு கிராமத்தில் 1.85 ஏக்கர் இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் நாளை பிற்பகல் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்படும் அவரது உடல் ராமேஸ்வரத்தில் அவரது பூர்வீக இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர், நாளை மறுநாள் (30-ம் தேதி) காலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். 11 மணியளவில் அடக்கம் செய்யப்படும் என மத்திய உள்துறை வட்டாரங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அவரது இறுதி ஊர்வலத்தில் முக்கிய மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கவுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக மாநில போலீஸ் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.

https://www.facebook.com/groups/828239657212964/permalink/850294421674154/






Other News
1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
17. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
21. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
23. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
26. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..