Home >> News >> Detail
  Login | Signup  

முத்தலாக்_தடை_சட்டம்.

Posted by Haja Mohideen (Hajas) on 12/30/2017 4:49:37 AM

 

#முத்தலாக்_தடை_சட்டம்.

ஏற்கனவே ...

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட ...இந்த இன்ஸ்டன்ட் ட்ரிபிள் தலாக்கைத் ...தூசி தட்டி ...மறுபடியும் பாராளுமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ள .

மோடி வகையறாக்களே. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பே ஒரு சட்டம்தான் (Judge Made Laws) 

ஆகவே ஏற்கனவே உள்ள சட்டத்தை மறுபடியும் புதிதாகச் செய்வது போல் 120 கோடி மக்களின் நேரத்தை வீணடிப்பது ஓர் வரலாற்றுப் பிழை .

மேலும் விவாகரத்து வழக்குகளைப் பொறுத்தவரை இந்த தேசத்தில் மிக அதிகம் துன்பப்படுவது இந்துப் பெண்களே  இஸ்லாமியப் பெண்கள் அல்ல. ஒரு விவாகரத்து HMOP வழக்கு மெயின் சூட் எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்றும் பாதிக்கப்பட்ட இந்துப் பெண் தனது வாழ்விற்காக போடும் Maintenance Petition ஐ I/A வின் மீது I/A வாக எத்தனை வழக்குகள் ஓடும் என்றும் அந்த I/A விலேயே எத்தனை அப்பீல் மனுக்கள் ஓடும் என்றும்  பலருக்கும் தெரியாது.

நீதிமன்ற நடைமுறையே தெரியாமல் பலரும், தலாக்கை எதிர்த்து பதிவுகள் இடுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது. இத்தனை இடைக்கால I/A மனுக்களால் பெண்தரப்பு சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்து விடும்.

பல பெண்கள் திக்குத் திசையற்று சிதறி விடுவார்கள் ...

இத்தனை துன்பங்களை நிர்க்கதியாக, இந்துப் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதை எல்லா நீதிமன்ற வாசல்களிலும் அனைவரும் காண இயலும் ...

பாஜகவின் இந்த தலாக் சட்டமுன்வடிவால் எந்த இஸ்லாமிய பெண்ணும் தன் கணவன் மேல் போலீசில் புகார் அளிக்கப் போவதில்லை (அரிதிலும் அரிதாக ஒரு சிலரைத் தவிர) .

மற்றபடி, மோடி வகையறாக்களைப் பொறுத்தவரை இந்துக்களோ,இஸ்லாமியர்களோ, அதைப் பற்றிக் கவலையில்லை கார்ப்ரேட் நலன் மட்டுமே முக்கியம்.

முத்தலாக் சொல்லி தன் மனைவியை விவாகரத்து செய்யும் நபருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை...

இது அறிவுக்கு பொருத்தமற்ற சட்டம்.

சில_கேள்விகள்...

1. அந்த நபரை சிறையிலடைத்து விடுவதால், அவர் அந்த பெண்ணுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்திடுவாரா.?

2. அவர் சிறைச்சாலையிலிருக்கும் காலத்தில், அந்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் வாழ்வாதாரம் கொடுக்கப் போவது யார்.?

3. இந்த சட்டத்தினால் விவாகரத்து குறைந்து விடுமா.?

4. தண்டனைக்கு பயந்து தலாக் சொல்லாமலேயே அந்த பெண்ணை அவர் ஒதுக்கி வைத்துவிட்டால், அவளின் நிலை என்ன.? இந்த தண்டனை சட்டம் அந்த பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு அளிக்கும்.?

5. அந்த ஆண் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்தோ, செய்யாமலோ இல்லற வாழ்க்கை வாழும்போது, இந்த பெண் மட்டும் தனியாக வாழ்வது அவளுக்கான தண்டனை ஆகாதா.? ( உதாரணம் : மோடியின் மனைவி யசோதா)

6. மேற்கூறிய 5 வது கருத்தின்படி வாழும் அந்த ஆண் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வது சாத்தியம்தானே.?

7. இணைவி, துணைவி (கீப்) என்ற நடைமுறையை இந்த சட்டம் எப்படி எதிர்கொள்ளும்.?

ஒரு முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணை, உயிரோடு இருக்கும் நிலையில் அவள் வயிற்றைக் கிழித்து கொன்ற கூட்டம் இன்று அவளுக்காக கவலை கொள்வதுதான் வேடிக்கையாக உள்ளது.

https://www.facebook.com/groups/974379272628815/permalink/1715431015190300/

 

 


Other News
1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
17. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
21. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
23. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
26. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..