Home >> News >> Detail
  Login | Signup  

ஶ்ரீதேவியை விட சிரியாவை அதிகம் தேடிய தமிழ்நாடு! #GoogleTrends

Posted by S Peer Mohamed (peer) on 2/28/2018 12:00:53 PM

சிரியா விவகாரம் பூதாகரமாகிக்கொண்டே போகிறது. கூட்டா மாகாணத்தில் பிஞ்சுக் குழந்தைகளை எல்லாம் பொட்டலம் போல் கட்டிக்கொண்டு போகிறார்கள் பெரியவர்கள். நெருப்பின் வீரியம் கூட தெரியாத குழந்தைகள் இருக்கும் வாழிடத்தில் ரசாயன வெடிகுண்டுகளை அந்நாட்டு அரசு போடுவதாக சொல்லப்படுகிறது. உலகில் பலருக்குச் இவ்விவகாரம் பற்றிய புரிதல் இல்லை அதைத் தெரிந்துகொள்ளவும் முயற்சிசெய்வதில்லை. ஆனால், தமிழகம் அப்படியா?

 

கூட்டா தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 7 நாள்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை சிரியா. உண்மையில் சிரியாவில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள கூகுளை அதிகம் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் என்கிறது கூகுள் ரிப்போர்ட். Syria, syria news in tamil, syria attack reason என்கிற வார்த்தைகள்தான் உலகளவில் தமிழர்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ள வார்த்தைகள். உலகளவில் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். உலகளவில் சிரியாவைப் பற்றி அதிகம் தேடிய நகரங்களில் முதலில் இருப்பது சென்னைக்கு அருகே உள்ள ஆவடி, இரண்டாவது சிக்கிமின் காங்தோக், மூன்றாவது சென்னை சிறுசேரி. சிரியாவைப் பற்றியும் அதன் பின்புலத்தை பற்றியும் அதிகம் தேடியவர்கள் பட்டியலில் ஆவடி, சிறுசேரி, காட்டாங்குளத்தூர், நாகர்கோவில், மதுரை, திருச்சி, வேலூர், சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சிபுரம், என்று முதல் 20 இடங்களில் 14 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளவை. முதல் 50 இடத்தில் தமிழ்நாட்டுப் பகுதிகள்தான் 90 சதவிகிதம். சிரியா குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூகுளில் தேடியிருக்கிறார்கள். சிரியா பற்றிய தமிழ்ச் செய்தி, சிரியா தாக்குதலுக்கான காரணம், சிரியாவை யார் தாக்குகிறார்கள், சிரியா தாக்குதலில் மரணத்தின் எண்ணிக்கை போன்ற வார்த்தைகள் தமிழகத்தில் இருந்து ஆங்கிலத்தில் அதிகமாகத் தேடப்பட்டவை.

 

இந்த விழிப்புஉணர்வுக்கு நம் நெட்டிசன்களுக்கும் நன்றிசொல்லியாக வேண்டும். கொஞ்சமும் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இல்லாத இந்நாட்டைப் பற்றியும், அங்கு நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளைப் பற்றியும், எங்கும் இல்லாத அளவு செய்திகள், வலைப்பதிவுகள், யூ-டியூப் வீடியோக்கள் தமிழில் அதிகமாகவே வலம்வருகின்றன. ஆனால், போரை முன்னின்று நடத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஈராக் போன்ற நாடுகள் இவ்விவகாரம் பற்றிய செய்தியைக் கடந்த ஏழு நாள்களில் மிகச் சொற்பமாகவே தேடியுள்ளனர். குறிப்பாகக் கூகுள் ரிப்போர்ட்டில் US, 37-வது இடத்திலும், ரஷ்யா 63-வது இடத்திலும் உள்ளன. ஈழத்தில் நடந்தவை சிரியாவில் ஏன் நடக்கிறது என்ற கேள்வி தமிழர்களின் இந்தக் கூகுள் தேடல்களையும், வலைப்பதிவுகளையும் உருவாக்கியிருக்கலாம்.

 

இதே சீரியஸான வேளையில்தான் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாத சில நெட்டிசன்களும் தங்களுக்குத் தேவையானவற்றை தேடியுள்ளனர். கடந்த ஏழு நாள்களில் அதிகம் தேடப்பட்ட சில வார்த்தைகளில் pray for syria quotes மற்றும் pray for syria images என்ற வார்த்தைகளும் இருந்தன.


ஶ்ரீதேவியின் மரணம் அனைவரையும் திசைதிருப்பிவிட்டது, செத்துக்கிடக்கும் மழலைகளை விட ஶ்ரீதேவியின் மரணம்தான் இவர்களுக்கு முக்கியம் என்றெல்லாம் தமிழர்களைப் பார்த்துச் சொல்லமுடியாது. ஶ்ரீதேவியைப் பற்றித் தேடியவர்களில் முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நகரமும் இல்லை என்பதும் கூகுள் ரிப்போர்ட்டில் உள்ளது. Pray for Syria என்ற பதிவுகள் வெறும் வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகள் பலரை சிரியா நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் பற்றித் தேடவைத்துள்ளது. என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம், அடுத்து நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை யோசிப்போம்.













Other News
1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed
3. 28-06-2020 நெல்லையின் நேர்மை குணம் - S Peer Mohamed
4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed
5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed
6. 28-06-2020 COVID-19 impact: 59 flights to take Indians home from UAE in phase 4 of Vande Bharat Mission - S Peer Mohamed
7. 28-06-2020 Abu Dhabi facilitates return of 180,000 workers in 3 months - S Peer Mohamed
8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..