Home >> News >> Detail
  Login | Signup  

துபாயில் நன்மை செய்யும் சகோதரர்: சுமார் 4,700 உடல்களை ஊருக்கு அனுப்பி வைத்த அஷ்ரப்

Posted by S Peer Mohamed (peer) on 3/1/2018 5:16:54 AM

#துபாயில் நன்மை செய்யும் சகோதரர்

#தன்னலமற்ற சேவையால் பல குடும்பங்களுக்கு நன்மைசெய்யும் துபாய் வாழ் இந்தியர் அஷ்ரஃப். இவர் கையெழுத்திட்டுத்தான் துபாயில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சுமார் 4,700 உடல்களை அஷ்ரஃப் கையெழுத்திட்டு அவர்களது தாய் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். 

ஸ்ரீதேவியின் உடலைக் காண ஆயிரக்கணக்கான இந்தியர்களின் கண்கள் கண்ணீரோடு காத்திருக்கும் நிலையில் அவரது அசைவற்ற உடலை சவப்பெட்டியில் வைத்து அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து, ஆவணத்தில் கையெழுத்திட்டவர் துபாயில் வாழும் கேரளத்தவர் அஷ்ரஃப். 44 வயதாகும் அஷ்ரஃப், ஐக்கிய அரபு நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடல்களை தாயகம் அனுப்பத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை செய்ய உதவி வருகிறார்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி 16 ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வரும் அஷ்ரஃப், இதுவரை 38 நாடுகளைச் சேர்ந்த 4,700 பேரின் உடல்கள் தாயகம் திரும்ப உதவியுள்ளார். 

இது பற்றி அவர் கூறுகையில், துபாயில் அதிகாரிகளுக்கு நீங்களோ, நானோ எல்லோருமே ஒன்றுதான். இது துபாயாக இருக்கட்டும், ஷார்ஜாவாக இருக்கட்டும், ஐக்கிய அரபு நாடுகளில் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எல்லோரும் ஒன்றுதான் என்கிறார்.

துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் உடல் போனி கபூரின் பெயரில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்நாட்டைச் சேர்ந்த குடியுரிமை பெற்ற ஒருவர் உறுதி அளிக்க வேண்டும் என்ற அமீரக சட்டப்படி, அஷ்ரஃப் கையெழுத்திட்டே ஸ்ரீதேவியின் உடல் தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமீரகத்தின் சட்டத்திட்டங்கள் அனைத்தும் அஷ்ரஃபுக்கு அத்துப்பிடி. துபாயில் பிழைப்புத் தேடி வந்து உயிரிழக்கும் பலரது குடும்பத்திற்க்கு உதவிசெய்யும் அஷ்ரப் . ஒரு மாதத்துக்கு 30 முதல் 40 உடல்களை தனது முயற்சியினால் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அஷ்ரஃப் பற்றி அறிந்த பல நாடுகளைச் சேர்ந்தவர்களும், தங்களது உறவினர்கள் உயிரிழக்கும் போது தொடர்பு கொள்வது இவரைத்தான். சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான கட்டணங்களை மட்டுமே உறவினர்களிடம் இருந்து பெறும் அஷ்ரஃப், தனது சேவைக்காக எந்த பணத்தையும் வாங்குவதில்லை. அது மட்டுமல்ல, தனது ஈடுஇணையற்ற சேவைக்காக ஒரு நன்றியைக் கூட அவர் எதிர்பார்ப்பதில்லை.

அது பற்றி அவர் கூறுவது என்னவென்றால், தாய் நாட்டுக்கு உடல் வந்ததும், எனக்கு போன் செய்து நன்றி கூற வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். போனில் அதிக நேரம் யாருடனும் பேசுவதில்லை. ஏன் தெரியுமா? உறவை இழந்து துடிக்கும் குடும்பத்தினர் உதவி கோரி என்னை அழைக்கும் போது அவர்களுக்கு அழைப்பு கிடைக்காமல் போய்விடக் கூடாதல்லவா? என்று கேட்கும் அஷ்ரப், கடைசியாக ஒரு முறை தனது உறவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கும் மக்களுக்காகவே இதனை செய்வதாகவும் கூறுகிறார்.அஷ்ரப் அஜ்மான் 0553886727,இவரின் கைபேசி!








Other News
1. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
2. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
3. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
4. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
5. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
6. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
8. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
9. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
10. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
11. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
12. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
13. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
14. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
15. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
16. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
17. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed
18. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed
19. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed
20. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed
21. 12-02-2020 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
22. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen
23. 07-02-2020 Eruvadi - 2011 - Haja Mohideen
24. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 
 - S Peer Mohamed
25. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed
26. 26-01-2020 Feeling proud to be Indian - By an Eruvadian - S Peer Mohamed
27. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed
28. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed
29. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed
30. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..