Home >> News >> Detail
  Login | Signup  

அப்போது சொன்னார், அது இப்போதும் வலிக்கிறது!

Posted by S Peer Mohamed (peer) on 3/1/2018 11:24:25 PM

அப்போது சொன்னார் இப்போதும் வலிக்கிறது!

ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் போரினால் உள்நாட்டிலே அகதிகளாக இருக்கும் நிலைக்கு சிரிய மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சிரியாவில் நடப்பதை உள்நாட்டுப் போர் என்பதைவிடப் பிறநாடுகளால் தூண்டப்பட்ட ஒரு யுத்தமாகவே அது மாறி நிற்கிறது. கொத்துக் கொத்தாய் மடியும் குழந்தைகளின் முகங்களைப் காணமுடியவில்லை. சிரியா மீதும் அங்கே அகதிகளாக்கப்பட்டிருக்கும் அம்மக்கள் மீதும் ஏன் நாம் அக்கறை கொள்ள வேண்டும் என, நிஜவாழ்க்கையில் அசல் கதாநாயகியாக வலம் வரும் ஏஞ்சலினா ஜோலி, கடந்த 2015-ம் ஆண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியபோது ஐந்து காரணங்களைக் கூறினார். உலகின் மனசாட்சியை உலுக்கிய அந்த காரணங்கள் இந்த கணம் வரை அப்படியே இருக்கின்றன...

1. உலக நாடுகளின் தலைவர்களே, குடிமக்களே... உங்களின் நாய்க்குட்டிகள் கூட உச்சபட்ச பாதுகாப்பில் தூங்கும் நேரத்தில்தான், 'என் மகளைத் துப்பாக்கி முனையில் ஒருவன் பாலியல் அடிமையாகக் கடத்திப் போனதைத் தடுக்க வழியின்றி வேடிக்கை பார்த்தேன்’ என ஒரு தாய் என்னிடம் அழுதபோது, நான் என் கண்களைத் தாழ்த்திக்கொள்ள நேர்ந்தது!

2. ஒரு பெண் பிள்ளை, தன் சின்னஞ்சிறிய சகோதரர்களையும், சகோதரிகளையும் குடும்பத் தலைவியாகக் காத்து வருகிறாள் ஓர் அகதிக் கூடாரத்தில். அந்தச் சிறுமியின் தாய் விமானக் குண்டுவீச்சில் இறந்து போயிருந்தார். அவர்களின் தந்தை ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். அவரின் நிலை என்னவெனத் தெரியவில்லை. ஆக, குடும்பத் தலைவி பொறுப்பேற்றுக் கொண்ட அந்தப் பெண்ணின் வயது 11.

3. பல கட்டடங்களைக் கட்டிய ஒரு பொறியாளர், அகதியாய் உயிர் பிழைக்க தப்பிச் செல்லும் போது அவரது கண் முன்பாக அவரின் மகள் சென்ற படகு விபத்துக்குள்ளாகி 8 வயது மகள் கடலில் மூழ்கிச் சாவதை செய்வதறியாமல் பார்த்துக் கதறினார்’ என்று அவருடைய உறவினர்கள் அவர்களுடைய மொழியில் சொன்னது எனக்குப் புரியவில்லை. ஆனால், ஆறு பிள்ளைகளின் தாயாக அதன் வலியை உணர்ந்தேன்!

4. கால்கள் அற்ற ஒரு இளைஞனைச் சந்தித்தேன், உனக்குச் செயற்கைக் கால்கள் வேண்டுமா, வேறெதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்டேன், 'ஒரே ஒரு உதவி. எனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது. நாங்கள் ஏன் நிர்மூலமாக்கப்பட்டு இரவில் பனிகொட்டும் பாலைவனத்தில் கூடார வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டோம்? இதற்கு மட்டும் பதில் தெரிய வேண்டும்' என்றான். கனவான்களே எனக்குத் தெரியும், இதற்கு உங்களிடத்திலும் பதில் இல்லை என்று!

5. உலக நாடுகளே, நீங்கள் விமானத்தில் உணவும், மருந்தும் போடுவதால், அம்மக்கள் உயிரோடிருக்க முடிகிறது என்றால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்தால் அவர்கள் மீது குண்டும் போடப்படுகிறது. எவ்வளவு பணம் வேண்டும், எவ்வளவு மருந்துகளும், உணவும் வேண்டும்? எனக் கேட்கும் விசாலமான மனது உங்களுக்கு இருக்கலாம், ஆனால் சிரியா மக்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கதகதப்பான கூடாரம் மட்டுமே. அது உயிர்ப் பாதுகாப்பு மிக்க உங்கள் நாடுகளில் வேண்டும். தயவு செய்து உங்கள் எல்லைகளைப் பூட்டிவிட்டு உணவுகளை எறியாதீர்கள், அது குண்டைவிடக் கொடியது.

- Jayanthan Jesudas










Other News
1. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
2. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
3. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
4. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
5. 25-05-2018 மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர் - S Peer Mohamed
6. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
7. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
8. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
9. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
10. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
11. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
12. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
13. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
14. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
15. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
16. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
17. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed
18. 11-04-2018 பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள் - Haja Mohideen
19. 17-03-2018 ஏர்வாடி SV_இந்து_துவக்க_பள்ளியில் குழந்தைகளுக்கு கண்ணில் பாதிப்பு - Haja Mohideen
20. 08-03-2018 Spit-and-rob gang arrested in Ajman - S Peer Mohamed
21. 08-03-2018 By rewriting history, Hindu nationalists aim to assert their dominance over India - S Peer Mohamed
22. 02-03-2018 சிரியாவில் நடக்கும் மனிதவிரோத கொலைதாக்குதல்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - S Peer Mohamed
23. 02-03-2018 ஏர்வாடி பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு... - S Peer Mohamed
24. 01-03-2018 ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக கருதப்படும் ஊடக நண்பர்களே.... - S Peer Mohamed
25. 01-03-2018 துபாயில் நன்மை செய்யும் சகோதரர்: சுமார் 4,700 உடல்களை ஊருக்கு அனுப்பி வைத்த அஷ்ரப் - S Peer Mohamed
26. 01-03-2018 பற்றி எரியும் சிரியா - நடப்பது என்ன? - S Peer Mohamed
27. 01-03-2018 நடிகைகளை நாட்டு தியாகிகளாக போற்றும் அவலம் - S Peer Mohamed
28. 01-03-2018 ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப உதவிய சாமான்யர் அஷ்ரப் - S Peer Mohamed
29. 01-03-2018 ரஷ்ய அதிபருக்கு தமுமுக கோரிக்கை... - S Peer Mohamed
30. 01-03-2018 ஏர்வாடி விவசாயிகள் மற்றும் அரசியல்கட்சியினர் வட்டாட்சியருடன் சந்திப்பு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..