Home >> News >> Detail
  Login | Signup  

மதத்தை விட மனிதமே முக்கியம்- சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்

Posted by S Peer Mohamed (peer) on 5/25/2018 3:28:32 PM

ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் நோன்பு மிகவும் முக்கியமானது. சூரியன் உதிப்பதற்கு முன் உணவு உண்டப்பின் மீண்டும் சூரியன் மறையும் வரை தண்ணீரும் எச்சிலும் கூட விழுங்காமல் மிகவும் கண்டிப்பான நோன்பை கடைப்பிடிப்பர். இப்படிப்பட்ட புனிதமான ரமலான் மாத்தில் தன் மதக் கோட்டுபாடுகளை மீறி மகத்தான மனித நேயத்தில் ஈடுபட்டுள்ளார்.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ராஜேஷ் என்ற சிறுவனுக்கு தலசீமியா என்ற நோய் பாதிக்கப் பட்டது. அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப் பட்டது. ஆனால் அந்த அரிய வகை குரூப் ரத்தம் மருத்துவமனையிடம் இல்லை. இதனையடுத்து மருத்துவமனை உடனடியாக அன்வர் ஹுசேன் என்ற ரத்த தான குழு தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுவனின் அரிய வகை ரத்தமும் அன்வர் ஹுசேனின் நண்பர் ஜாவேத் ஆலம் என்பவரின் ரத்தமும் ஒரே வகை என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜாவேத் ஆலம்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர் ரத்தம் சிந்தக் கூடாது அல்லது வெளியாகக் கூடாது. அப்படி நிகழ்ந்தால் நோன்பு முறிந்துவிடும் என்பது இஸ்லாமியர்களின் மதக் கோட்பாடு.

ஆனால் இவை அனைத்தையும் அறிந்த ஜாவேத் ஆலம் சிறுவனின் உயிருக்காக நோன்பை கைவிடுவதில் தவறில்லை என ரத்ததானம் செய்தார். இறுதியில் ஜாவேத் ஆலமின் ரத்தம் ஏற்றப்பட்டு சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது குறித்து பேசிய ஜாவேத் ஆலம் " இஸ்லாம் மதம் மனிதர்களுக்கு முதலில் உதவ வேண்டும் என்பதை எங்களுக்கு பயிற்றுவித்துள்ளது. உயிருக்கு போராடும் ஒருவருக்கு உதவுவதற்காக என் நோன்பை முறித்ததில் தவறில்லை என்பதை நான் உணர்ந்தேன் அதையே செய்தேன்".
 

Thanks: http://www.puthiyathalaimurai.com/news/india/45816-muslim-man-from-bihar-breaks-ramadan-fast-to-save-8-year-old-thalassemic-boy.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice






Other News
1. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
2. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
3. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed
4. 13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவி - Silicon Adam - S Peer Mohamed
5. 13-10-2018 தூர்வாரப்பட்ட ஏர்வாடி பீர் குளத்தில் நீர் வரத்து - S Peer Mohamed
6. 13-10-2018 ஈமானின் இளைஞர்களுக்கான விசேச நிகழ்ச்சி - S Peer Mohamed
7. 25-05-2018 Video: தூத்துக்குடி எல்லாம் என் அக்கா தங்கடா கேக்க யாருமில்லன்னு நினைச்சீங்களா - S Peer Mohamed
8. 25-05-2018 Video: தமிழக போலீசை காரித்துப்பும் ராணுவ அதிகாரி - S Peer Mohamed
9. 25-05-2018 என் மக்கள் நேர்மையானவர்கள் ராணுவ வீரரின் மனக்குமுறல் - S Peer Mohamed
10. 25-05-2018 Sterlite - Social Media - S Peer Mohamed
11. 25-05-2018 ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு - S Peer Mohamed
12. 15-05-2018 ஏர்வாடியில் பீர் குளம் தூர்வாருதல் - S Peer Mohamed
13. 11-05-2018 சிஷ்யனை ஓரம்கட்டிய குரு: மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி மாற்றம்: மகாதிர் முகமது(வயது92) - S Peer Mohamed
14. 11-05-2018 தந்தையை இழந்து தவித்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்: - S Peer Mohamed
15. 22-04-2018 Videos: British media reaction on protest against PM Modi London Visit 2018 - S Peer Mohamed
16. 19-04-2018 Angry protests welcome Indian PM Modi in London - S Peer Mohamed
17. 13-04-2018 #justiceforasifa அசிபாவுக்கு நீதி - S Peer Mohamed
18. 13-04-2018 Videos: கர்நாடகாவில் தமிழனுக்கு கிடைக்கும் மரியாதையை பாருங்கள் #str - S Peer Mohamed
19. 13-04-2018 Videos: மோடியை மிரள வைத்த தமிழர்கள்! உலகளவில் இணையத்தில் நம்பர் 1 #GoBackModi - S Peer Mohamed
20. 13-04-2018 உலகை திரும்பி பார்க்க வைத்த கோ பேக் மோடி.. நெட்டிசன்கள் புரட்சி எப்படி சாத்தியமானது! #gobackmodi - S Peer Mohamed
21. 13-04-2018 நம் மகள்கள் ஆசீஃபாவாக ரொம்ப காலம் எடுக்காது - S Peer Mohamed
22. 13-04-2018 #அஸிஃபா - S Peer Mohamed
23. 11-04-2018 பள்ளிவாசலோடு மட்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள் - Haja Mohideen
24. 17-03-2018 ஏர்வாடி SV_இந்து_துவக்க_பள்ளியில் குழந்தைகளுக்கு கண்ணில் பாதிப்பு - Haja Mohideen
25. 08-03-2018 Spit-and-rob gang arrested in Ajman - S Peer Mohamed
26. 08-03-2018 By rewriting history, Hindu nationalists aim to assert their dominance over India - S Peer Mohamed
27. 02-03-2018 சிரியாவில் நடக்கும் மனிதவிரோத கொலைதாக்குதல்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - S Peer Mohamed
28. 02-03-2018 ஏர்வாடி பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு... - S Peer Mohamed
29. 01-03-2018 அப்போது சொன்னார், அது இப்போதும் வலிக்கிறது! - S Peer Mohamed
30. 01-03-2018 ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக கருதப்படும் ஊடக நண்பர்களே.... - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..