ஏர்வாடி மாடல் பள்ளியில் உலக செஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Posted by S Peer Mohamed (peer) on 7/25/2023 9:51:34 AM

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி மாடல் பள்ளியில் உலக செஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

23-ஜுலை-2023,
ஞாயிற்றுக் கிழமை
உலக செஸ் தினத்தை முன்னிட்டு,
நெல்லை ஏர்வாடி மாடல் பள்ளி-NEMS சார்பாக செஸ் போட்டிகள் முதல் முறையாக,
வெகு விமரிசையாக நடத்தப்பட்டது .

இளம் கிரான்ட் மாஸ்டர்களை உருவாக்கும் விதமாகவும், குழந்தைகளின் தனித் திறமையை வளர்க்கும் விதமாகவும்,
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ , மாணவிகளை ஒன்றிணைத்து இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட செஸ் அகாடமியின் பொருளாளர்: திரு.மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலோடு நெம்ஸ் பள்ளி வளாகத்தில் இந்த போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக இதற்கான முன் பதிவுகள் ஜுன் மாதம் முதல் பெறப்பட்டது.

மாணவ மாணவிகளுக்கான குழுக்கள் FIDE (உலக செஸ் அகாடமி) விதிமுறைகள் படி பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதலாவதாக காலை 10.15 மணிக்கு: மாணவி பஸ்னா கிராத் ஒதினார்.

ஆசிரியை: ஜனோபர் அவர்கள் செஸ் போட்டி குறித்த அறிமுக உரையாற்றினார்கள்.

மாணவி பஸ்னா வரவேற்புரை ஆற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் விதமாக நெம்ஸ்-NEMS பள்ளியின் அறங்காவலர் ஜனாப்: ஹனீப் அவர்கள் பொன்னாடை போர்த்தினார்கள்.

உலக செஸ் போட்டியின் விதிமுறைகள் குறித்து
திரு: செல்வ மணிகண்டன், திரு.பவுல்ராஜ்
ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

இப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த மஜித் அறக்கட்டளையின் தலைவர் ஜனாப்: ரிஸ்வான்,
பேரூராட்சி மன்ற உறுப்பினர்
ஜனாப்: அய்யூப்
மற்றும் பேரூராட்சி மன்ற தலைவி ஜனாபா: தஸ்லீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டிகளை நெல்லை ஏர்வாடி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் அறங்காவலர் ஜனாப்: ஹனீப், அவர்களுடன் இனணந்து
ஜனாப்: ரிஸ்வான் அவர்கள் 5 நிமிடம் செஸ் விளையாடி துவக்கி வைத்தார்கள்.

ஒவ்வொரு சுற்று போட்டியிலும் வென்றவர்களுக்கான விபரங்கள் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் ( International chess Federation) அங்கீகரிக்கப்பட்ட வலைதளங்கள் மூலம் வெளியிடப்பட்டது.

நான்கு குழுக்களுக்கு,
3 மற்றும் 4 சுற்றுகளாக
போட்டிகள் நடைபெற்றன.

முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கான பரிசுகளை மாவட்ட செஸ் அகாடமியின் பொருளாளர் மற்றும் இண்டெர்னேஷனல் ஆர்பிட்டருமான திரு: மணிகண்டன்,
நெல்லை மாவட்ட செஸ் அகாடமியின் செயலாளளர் திரு:பவுல்ராஜ்
மஜீத் அறக்கட்டளையின் தலைவர் ஜனாப்: ரிஸ்வான்
பள்ளி முதல்வர் திருமதி: மும்தாஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில்,
ஏர்வாடி அரசு ஆண்கள் பள்ளியின் மாணவர்கள் 60 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டது முத்தாய்ப்பாக அமைந்தது.

மேலும் மற்ற பள்ளிகளின் மாணவர்களோடு சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நெம்ஸ்-NEMS பள்ளியின் மாணவர் தல்ஹா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே சிறப்பாக நிறைவுற்றது.

4 குரூப்களில் வயது வாரியாக முதல் பரிசு பெற்ற மாணவ,மாணவிகளின் விபரங்கள்:
———————————————————
Group: 01
1 வது வகுப்பு முதல் 3 வகுப்பு வரை:
8 வயதுக்கு கீழ்:
மாணவர் பிரிவு:

முதல் பரிசு:
முகம்மது சதக்,
நெம்ஸ்-NEMS பள்ளி- ஏர்வாடி

1 வது வகுப்பு முதல் 3 வகுப்பு வரை
8 வயதுக்கு கீழ்:
மாணவி பிரிவு:

முதல் பரிசு:
நூருல் சலீனா,
நெம்ஸ்-NEMS பள்ளி- ஏர்வாடி
———————————————————
Group: 02
5 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை:
10 வயது
மாணவர் பிரிவு:

முதல் பரிசு
பொன் கிருஸ்னா,
பப் ஸ்கூல்-திருக்குறுங்குடி

10 வயது
மானவி பிரிவு:

முதல் பரிசு
நுஸ்ரா,
ரோஸ் மேரி மெட்ரிக் மேல் நிலை பள்ளி-திருநெல்வேலி
———————————————————
Group: 03
7 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை:
13 வயது
மாணவர் பிரிவு

முதல் பரிசு:
அப்துல் வாஹித்,
அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி-
ஏர்வாடி

13 வயது
மாணவிகள் பிரிவு

முதல் பரிசு:
சமிக்ஸா,
ராணி மெட்ரிக் மேல் நிலை பள்ளி-ஏர்வாடி
———————————————————
Group: 04
9 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை:
16 வயது
மாணவர்கள் பிரிவு

முதல் பரிசு
சாஹிப் ஜமால்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி-ஏர்வாடி

16 வயது
மாணவிகள் பிரிவு

முதல் பரிசு
ஹன்னாள்,
ராணி மெட் ரிக் மேல் நிலை பள்ளி-ஏர்வாடி.
———————————————————
























Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..