இஸ்ரேல் படுகொலைச் செய்த ஹமாஸ் தலைவர் ஸாலஹ் அல் அரூரி - யார் இவர்?

Posted by S Peer Mohamed (peer) on 1/3/2024 6:12:23 PM

லெபனானில் ஹமாஸ் தலைவர் ஸாலஹ் அல்-அரூரியை இஸ்ரேல் படுகொலை செய்தது - யார் இவர்?

ஸாலஹ் அல்-அரூரி பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸின் துணைத் தலைவராகவும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அல்-கஸ்ஸாம் படையணியின் நிறுவனராகவும் இருந்தார்.
ஜனவரி 2, செவ்வாயன்று மேற்கு பெய்ரூட்டில் அலுவலகத்தில் இருந்தபோது இஸ்ரேலிய ட்ரோன் மூலம் பல ஏவுகணைகளால் லெபனானில் உள்ள மற்ற உயர் கஸ்ஸாம் தலைவர்களுடன் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அல்-அரூரியின் படுகொலையை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

"பாலஸ்தீனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நமது தலைமை மற்றும் பாலஸ்தீன மக்களின் அடையாளங்களுக்கு எதிராக சியோனிச ஆக்கிரமிப்பு நடத்தும் இந்த கோழைத்தனமான படுகொலைத் தாக்குதல்கள், நமது விருப்பத்தையும் நமது மக்களின் உறுதியையும் உடைப்பதில் வெற்றியடையாது" என்று ஹமாஸின் அரசியல் அலுவலக உயர்மட்ட உறுப்பினர், இஸ்ஸாத் அல்-ரிஷ்க் கூறினார்.

தங்கள் பங்கிற்கு, வலதுசாரி பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு உட்பட இஸ்ரேலிய தலைவர்கள் அரூரி கொல்லப்பட்டதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்,

ஸாலஹ் அல்-அரூரி

ஸாலஹ் அல்-அரூரி ஒரு சாதாரண தலைவர் அல்ல. ஆரம்பத்தில், அவரது அரசியல் பார்வை மற்றும் உருவாக்கம் ஒரு பாலஸ்தீனியராக தனது தாயகத்தின் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர நேரடியாக ஆக்கிரமிப்பை போராடியதன் அனுபவத்தின் மூலம் விளைந்ததாகும்.

அவர் இஸ்ரேலுக்கும் எதிராக போராடியதால் மொத்தம் 15 ஆண்டுகள் இஸ்ரேலிய சிறையில் கழித்தார்.

அல்-அரூரி 1966 ஆம் ஆண்டு ரமல்லாவுக்கு அருகில் அராரா நகரில் பிறந்தார் - இதனால் தான் அரூரி அவரது கடைசி பெயராக இருக்கின்றது. - அவர் வெளியேறிய பிறகும் மேற்குக் கரையுடனான அவரது தொடர்பு வலுவாக இருந்தது

மேற்குக் கரையில் அதிகரித்து வரும் ஆயுதப் போராட்ட நிகழ்வின் பின்னணியில் அவர் மூளையாக இருப்பதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம் சாட்டியதுடன், அவரைக் கொன்றுவிடுவதாக பலமுறை மிரட்டியது.

பாலஸ்தீனியர்கள், லெபனானியர்கள் மற்றும் பிற அரபு எதிர்ப்புக் குழுக்களை ஒன்றிணைத்து இஸ்ரேலுக்கு எதிராக கூட்டாகப் போராட விஹ்தத் அல்-சஹாத் (Wihdat Al-Sahat, or unity of the squares) எதிர்ப்பு உத்தியை ஏற்படுத்தில் முக்கியமான ஒரு நபராக இவர் பாராட்டப்படுகிறார்.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்ததற்கு ஈடாக, பிடிபட்ட இஸ்ரேலிய சிப்பாய் கிலாட் ஷாலித்தை அல்-கஸ்ஸாம் விடுதலை செய்த 2011 ஆம் ஆண்டில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் அல்-அரூரி முக்கிய பங்கு வகித்ததற்காக அறியப்படுகிறார்

இஸ்ரவேல் ஏன் இவரைக் கொன்றது?

அக்டோபர் 7 இராணுவ நடவடிக்கையில் அல்-அரூரி ஆற்றிய பங்கு தெளிவாக இருந்தாலும், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை நிர்வகிப்பதற்கும், மேற்குக் கரையில் அதிகரித்து வரும் போராட்டத்தை நிர்வகிப்பதற்கும், மேலும் அரசியல் ரீதியாகவும் அவர் செயல்பட்டார் என்பது அறியப்படுகிறது. மேலும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

பலஸ்தீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான ராம்சி பரூட் பல காரணங்களுக்காக இஸ்ரேல் அல்-அரூரியை கொலை செய்திருக்கின்றது என்றார்.

1. முதலாவதாக, காசாவில் எந்த ஒரு இராணுவ வெற்றியையும் இஸ்ரேலினால் அடையமுடியவில்லை. தனது இராணுவத் தோல்வியிலிருந்து மக்களைத் திசைதிருப்ப அல்-அரூரியை இஸ்ரேல் கொன்றது.

2. இரண்டாவதாக, அக்டோபர் 7 தாக்குதல்களை உளவறியத் தவறிய ஷின் பெட் (Shin Bet) மற்றும் மொசாட் போன்ற அதன் உளவுத்துறை சமூகத்தின் சிதைந்த பிம்பத்தை மீட்டெடுப்பது.

3. மூன்றாவதாக, அல்-அரூரி ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது. குறிப்பாக அரூரியைக் கொல்வதற்கான தேர்வு, போரை விரிவுபடுத்த இஸ்ரேல் தயங்கவில்லை என்று மூன்று தரப்பினருக்கும் தெரிவிப்பது

4. நான்காவதாக, அல்-அரூரி கைதிகள் பரிமாற்றம் தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இஸ்ரேலிய கைதிகளின் விடுதலைக்கு ஈடாக அனைத்து பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது. ஹமாஸும் முழுமையான மற்றும் இறுதி யுத்த நிறுத்தத்தை விரும்புகிறது. பாலஸ்தீனிய பேச்சுவார்த்தையாளர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க இஸ்ரேலும் அவரைக் கொன்றிருக்கலாம்.

5. இறுதியாக, நெதன்யாகுவுக்கும் போர் அமைச்சரவையில் உள்ள அவரது போட்டியாளர்களுக்கும் இடையிலான அரசியல் மோதல் சமீபத்திய நாட்களில் இதற்கு முன்பு எப்போதுமில்லாத அளவை எட்டியுள்ளது. அரூரின் கொலை நெத்தன்யாஹு தனக்கான நேரத்தை அதிகரிப்பதற்காக எடுத்த ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

அரூரியின் மரணத்திற்கு ஹமாஸ் எவ்வாறு பதிலளிக்கும்?

ஸாலஹ் அல்-அரூரி ஒரு முக்கியமான பாலஸ்தீனிய எதிர்ப்புத் தலைவராக இருந்தபோதிலும், அவரது படுகொலை பாலஸ்தீனிய எதிர்ப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய நிலையில் எந்ததொரு நீண்டகால மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றாலும் எகிப்தும், கத்தாரும் எடுக்கும் பேச்சுவார்த்தை முயற்சிகளில் இது தடைகளை ஏற்படுத்தலாம்.

பாலஸ்தீனிய போராட்டம் என்பது ஒரு தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது நீடித்து நிலைத்து நிற்கும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒன்று அல்லது பல தலைவர்களைக் கொல்வது போராட்டத்தின் வீரியத்தை வீழ்த்துவதற்கு வழிவகுக்காது.

இந்த நிலையில் அரூரிக்கு பதிலாக யார் வருவார்களோ அவருடைய பாரம்பரியத்தை தொடரலாம், ஏனெனில் பாலஸ்தீனிய போராட்டம் நிலையான கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது, ஒரு குறிப்பிட்ட தலைவரின் கவர்ச்சி அதற்கு அவசியமில்லை.

இப்படி ஒரு படுகொலை நடக்கும் என்று போராளிகள் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பதால், ஹமாஸ் இதற்கு பதிலடி கொடுக்கும் என்பதில் எந்ததொரு சந்தேகமுமில்லை. உண்மையில், அக்டோபர் 7 தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு பாலஸ்தீனியரையும் படுகொலை செய்ய இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டுக்கு தான் பச்சை க் கொடி காட்டியதாக நெதன்யாகு சமீபத்தில் தான் அறிவித்திருந்தார்.

(The Palestine Chronicle)











Other News
1. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
3. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
4. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
5. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
6. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
10. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
15. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
16. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
24. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-116: புதிய யுக்திகளும், புதிய ஆயுதங்களும் வெற்றி முகத்தில் போராளி குழுக்கள் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..