Home >> News >> Detail
  Login | Signup  

ஏர்வாடிக்கு காத்திருக்கும் ஆபத்து..!

Posted by S Peer Mohamed (peer) on 3/16/2019 5:56:21 PM

 

உங்கள் வீட்டுக்குள் நுழைந்து யாரேனும் குப்பைகளை கொட்டிச் சென்றால் என்ன செய்வீர்கள்..?பக்கத்து வீட்டுக்காரர் அவர் வீட்டுக் கழிவுகளை உங்கள் மடைக்கு மாற்றி விட்டால்..?அவ்வளவு தான் போரே வந்து விடும்.. இல்லையா..?சரி..உங்கள் வீட்டுக் கழிவுநீர் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா..?என்றைக்காவது நமது கழிவுநீர் வேறு யாருக்காவது பாதிப்புகளை ஏற்படுத்துகிறதா என்பதை யோசித்திருப்போமா..? சுயநல உலகில் இது குறித்தெல்லாம் யோசிக்க நம் யாருக்கும் நேரம் இருப்பதில்லை..!

தமிழகத்திலேயே எந்த ஊருக்கும் இல்லாத ஓர் வரலாற்றுச் சிறப்பு நமதூர் நெல்லை ஏர்வாடிக்கு மட்டுமே உண்டு. ஆம் ஒவ்வொரு தெருவும் முற்றுப்பெருவது ஆற்றங்கரையாகத் தான் இருக்கும். இதை விட தமிழத்தின் வேறு எந்த ஊருக்கும் இச்சிறப்பு இருந்ததாகத் தெரியவில்லை. நம்பி மலையில் இருந்து குறுக்கும் நெடுக்குமாய் ஓடி பல ஊர் மக்களின் தாகத்தை தனித்த நம்பி ஆற்றை இன்றைய காலத்து பெரியவர்கள் நன்றிக்கடனோடு "அதெல்லாம் ஒரு காலமப்பா ன்னு" வாழ்வின் பொக்கிசத்தை பகிரச் செய்வார்கள்..

ஊருக்கு நடுவே ஆறு ஓடுவது ஓர் வரம். நிலத்தடி நீரை அதிக்கப்படுத்துவதற்கும் அதனை சுத்தமாக தேக்கி வைப்பதற்கும் ஆறு முக்கிய பங்காற்றுகிறது.

நேரம் கிடைத்தால் நம்பி ஆற்றை கொஞ்சம் எட்டிப்பாருங்கள்..!
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை தென்றல் வீசி சீறிப்பாய்ந்த ஆறு இப்போது வெறிச்சோடி புதர் மண்டி கிடக்கிறது. ஆற்றில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு மூட்டை மூட்டையாக மணல் திருடப்படுகிறது. ஒருகாலத்தில் ஒட்டுமொத்த ஊருக்கும் நீரை தந்த ஆறு இப்போது சாக்கடையாக மாறி ஓடுகிறது. நம்மில் பலரது வீட்டுக் கழிவுகளும் ஆற்றில் தான் கலக்கின்றன. அன்றாடம் குப்பைகள் கொட்டப்படுகின்றன. சுத்தமான நீருக்கு பதில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன. ஆறு முழுவதையும் ஒடை மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஊரின் மிக முக்கிய வளமான நம்பி ஆற்றை அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களால் இல்லாமல் சொந்த மண்ணின் மைந்தர்களாலேயே நாளுக்கு நாள் சூரையாடப்படுவது தான் வேதனை..

அண்மையில் நிதி அயோக் எனப்படும் மத்திய அரசின் நீர் மேலாண்மை குழு நடத்திய ஆய்வில் இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு விடும் என்ற அதிர்ச்சிகரமான உண்மையை வெளியிட்டுள்ளது. தூய்மையான குடிநீர் இல்லாமல் ஆண்டுதோறும் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்..!

கடந்த பருவமழையில் தமிழகத்திற்கு 600 மில்லி மீட்டர் கிடைக்க வேண்டிய மழை இப்போது வெறும் 340 மி.மீ மட்டுமே கிடைத்துள்ளது. இது வரக்கூடிய காலங்களில் இன்னும் குறையும் என்பது அதிர்சித் தகவல்.

கிடைக்கும் மழைநீரை பாதுகாப்பது இன்றியமையாத ஒன்று.இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு வீடுகளில் மிக ஆழமாக போர் போடுவது வாடிக்கையாகி விட்டது. ஒரு காலத்தில் கை போர் மூலம் வெறும் 40 அடியில் கிடைத்த தண்ணீர் இப்போது 800 அடியைத் தொட்டும் கிடைப்பதில்லை என்பது மலைக்க வைக்கிறது.. வீடுதோறும் அடி பண்புகள் இருந்த காலம் மாறி இப்போது கேன் வாட்டர்கள் பெருகிவிட்டது...! குடிநீரில் உள்ள அத்தனை சத்துக்களை உறிஞ்சி எடுத்து விட்டு வெறும் சக்கைத் தண்ணீரை கேனில் அடைத்து அதை காசு கொடுத்து வாங்குவதை விட மிகப்பெறிய கொடூரம் வேறு எதுவுமில்லை.
கேன் வாட்டர்களைப் போல் நமதூரில் தண்ணீர் லாரிகள் மூலம் நீர் தேவைகளை பூர்த்தி செய்யும் காலமும் வெகு தொலைவில் இல்லை.

கொட்டும் மழையை ரசிக்கிறோம், புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவு செய்கிறோம். ஆனால் அதனை சேகரிக்க தான் நமக்கு நேரமும் இல்லை, அக்கறையும் இருப்பது இல்லை. மழைநீரை பாதுகாக்க தவறிவிட்டு அதனை வீணாக சாக்கடையில் கலக்கச் செய்து ஆற்றில் விட்டு விடுகிறோம். இதனை தடுக்க வீடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் மழைநீர் தொட்டிகளை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து முடிந்தளவு நீரை தேக்கி பாதுகாத்தால் மட்டுமே ஏர்வாடியின் நிலத்தடி நீர் உயரும்.

வீடு,வாசல் என எண்ணற்ற சொத்துக்களை வருங்கால தலைமுறைக்கு சேகரித்து விட்டு உயிர் வாழ அடிப்படைத் தேவையான தண்ணீருக்கு அவர்களை யாரிடம் சென்று நிறுத்த போகிறோம்..?


~Asfhaq ibn Ali


Other News
1. 12-12-2019 குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்! - வைகோ - S Peer Mohamed
2. 12-12-2019 சாத்தான் வேதம் ஓதுகிறது - குடியுரிமை மசோதாவிற்கு எதிராக மகளவையில் தயாநிதி மாறன் - S Peer Mohamed
3. 12-12-2019 இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா...We oppose Citizenship Amendment Bill - S Peer Mohamed
4. 12-12-2019 குடியுரிமை (திருத்த) மசோதா 2019 சில விளக்கங்கள் - S Peer Mohamed
5. 12-12-2019 ஏர்வாடியில் புற்றுநோயை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - Haja Mohideen
6. 12-12-2019 புதிய வகுப்பறைத் தளங்கள் விஷ ஜந்துக்களின் கூடாரம் - Haja Mohideen
7. 03-12-2019 முடுக்கு - Haja Mohideen
8. 25-11-2019 UAE cabinet approves national holidays for public and private sector - S Peer Mohamed
9. 31-08-2019 MARRIAGE INVITATION நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
10. 31-08-2019 நிக்காஹ் அழைப்பிதழ் - Nsjohnson
11. 04-05-2019 அலோ மைம்பாத்துமா ! - S Peer Mohamed
12. 28-04-2019 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
13. 23-04-2019 இலங்கை குண்டுவெடிப்பு: தினமணி தலையங்கம் - S Peer Mohamed
14. 16-03-2019 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
15. 19-02-2019 அந்த 45 நிமிடம்தான் தீர்ப்பை மாற்றியது.. ஸ்டெர்லைட் வழக்கில் தரமான சம்பவம் செய்த வைகோ! - S Peer Mohamed
16. 18-02-2019 Indian expats in UAE pay homage to fallen heroes - S Peer Mohamed
17. 17-02-2019 காஷ்மீர் தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் உடல்கள் அடக்கம் - S Peer Mohamed
18. 26-01-2019 70th Republic Day: Adnoc building lights up in Indian tricolour - S Peer Mohamed
19. 26-01-2019 UAE leaders congratulate India's President on 70th Republic Day - S Peer Mohamed
20. 26-01-2019 UAE aid to Syria reaches Dh3.59 billion from 2012-2019 - S Peer Mohamed
21. 12-12-2018 உர்ஜித் படேல் ராஜினாமா அடிக்கும் அபாய எச்சரிக்கை மணி! - S Peer Mohamed
22. 12-12-2018 தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத் தலைமை அமர்வில், வைகோவின் உணர்ச்சி முழக்கம்! - S Peer Mohamed
23. 04-12-2018 UAE visa amnesty extended by one month - S Peer Mohamed
24. 04-12-2018 Photos: Indian worker gets royal farewell by Saudi family for serving 35 years - S Peer Mohamed
25. 26-11-2018 கஜா புயல் நிவாரணம் - ஏர்வாடி மக்கள் பங்களிப்பு - S Peer Mohamed
26. 21-11-2018 வேலைக்காக வெளிநாடு செல்லுபவர்கள் ஜனவரி 2019 முதல் இந்திய அரசின் அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்! - S Peer Mohamed
27. 21-11-2018 கஜா புயல் நிவாரண பணியில் அல் நுஸ்ரத் (நெல்லை ஏர்வாடி) - S Peer Mohamed
28. 24-10-2018 சபரிமலை: எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... - S Peer Mohamed
29. 13-10-2018 வரதட்சணை திருமணத்தில் பங்கேற்க மாட்டோம் - ஆவுடையார்பட்டினம் சுன்னத் ஜமாஅத் - S Peer Mohamed
30. 13-10-2018 உருவத்தை பார்த்து கின்டல் செய்யாதீர்கள். #சகோதரி_தமிழிசை_சவுந்தரராஜன் - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..