Home >> News >> Detail
  Login | Signup  

காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு

Posted by S Peer Mohamed (peer) on 6/28/2020 2:47:26 PM

காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு இது....

'நீங்கள் காவல் துறையில் இல்லாதிருந்தால் ஒருவரும் உங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் ", என்று சமீபத்தில் ஒரு அதிகாரி என்னிடம் கூறினார் . உண்மை தான் .... இந்த உண்மையை நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே நன்கறிவேன் ....

சென்னை யில் பணியாற்றிய போது வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நான் தான் அருகிலுள்ள மளிகைக்கடையில் வாங்குவேன் . அந்தக் கடையில் வேலை பார்க்கும் சிறுவனுக்கு நான் காவல்துறை அதிகாரி என்று தெரியாது . கைலி கட்டிக்கொண்டு தான் கடைக்குப் போவேன் .
கொஞ்சம் சீக்கிரமா கொடுப்பா என்றால் மிகவும் கோபப்படுவான் .... திட்டுவான் ..... வரிசையில் போய் நில்லுய்யா என்று கத்துவான் ....
சில நேரங்களில் என்னுடைய காக்கிச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் அதிகாரமும் , ஆணவமும் எட்டிப் பார்க்கும் . " டேய் நான் யார் தெரியுமா ", என்று கோபத்தோடு கேட்பேன் .

வேல வெட்டி இல்லாம ஊரச் சுத்துர , வொனக்கென்னையா மரியாதை ", என்பான் . நானும் அமைதியாக வந்து விடுவேன்.
இன்று வரை அதே கடையில் தான் காய்கறிகள் வாங்குகிறேன். அந்தப் பையன் இப்போது வளர்ந்து பெரிய பையராகிவிட்டார். ஆனாலும் அதே போல் மிகவும் கேவலமாக திட்டுகிறான்.....

என்னுடைய உண்மையான மதிப்பு அந்தத் தம்பிக்குத் தான் தெரிகிறது . நான் ஒன்றுமில்லாத குப்பை என்று ........
என்னுள் ஆணவமும் பெருமையும் , எழும்போதெல்லாம் அந்தத் தம்பி தான் எனக்கு போதி மரம் ...... அவனைப் பார்க்கும்போது சப்த நாடியும் அடங்கி விடும். அவ்வளவு கேவலமாகத் திட்டுவான் . இன்றைக்கும் அதை நான் ரசிக்கிறேன் ...... இன்று வரை நான் யாரென்று அவனுக்குத் தெரியாது .....

போலி மரியாதைகளும் வரட்டு கவுரவங்களும் நிறைந்த அரசாங்க உத்தியோகம் நம்மை ஆணவப் படுத்தி விடுகிறது ... நான் ஒன்றுமில்லாத குப்பை என்பதை இன்றும் நினைவூட்டும் அந்தத் தம்பி வாழ்க .......

நமது படிப்போ , பதவியோ , செல்வமோ , சொத்துக்களோ நமக்கு கடைசி வரை உதவாது ...... அன்பு காட்டுவோம் , அனைவரையும் நேசிப்போம் .... விட்டுக் கொடுப்போம் , தாழ்ந்து போவோம் ....மகிழ்ச்சி என்றும் நிலைக்கும் ,... வாழ்த்துக்கள் ..........


Other News
1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed
2. 28-06-2020 நெல்லையின் நேர்மை குணம் - S Peer Mohamed
3. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed
4. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed
5. 28-06-2020 COVID-19 impact: 59 flights to take Indians home from UAE in phase 4 of Vande Bharat Mission - S Peer Mohamed
6. 28-06-2020 Abu Dhabi facilitates return of 180,000 workers in 3 months - S Peer Mohamed
7. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed
8. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed
9. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed
10. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed
11. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed
12. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed
13. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா? இது தான் பகுத்தறிவு மண்ணா? - S Peer Mohamed
14. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed
15. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed
16. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed
17. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed
18. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed
19. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed
20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed
21. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed
22. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்! - S Peer Mohamed
23. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed
24. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..! - S Peer Mohamed
25. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed
26. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed
27. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed
28. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை ! - S Peer Mohamed
29. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed
30. 19-02-2020 லவ் ஜிகாத் - அளவற்ற அன்பு - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..